உலக கிண்ணப் போட்டிக்குப் பின்னரும் தொடர்ந்தும் விளையாடுவேன் - லசித் மலிங்கா
2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள 'ருவென்டி 20' உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னரும் தான் தொடர்ந்து விளையாடக்கூடும் என இலங்கை அணியின் 'ருவென்டி 20' போட்டிகளுக்கான தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
'ருவென்டி 20' போட்டியில் பந்துவீச்சாளர் ஒருவர் நான்கு ஓவர்களை மாத்திரமே பந்து வீசவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள மலிங்க எனது திறமைகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது என்னால் அந்த நான்கு ஓவர்களையும் வீச முடியும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் 'ருவென்டி 20' லீக் போட்டிகளில் நான் விளையாடியுள்ளதால் இரண்டு வருடங்களிற்கு மேல் என்னால் விளையாட முடியும் எனவும் நான் கருதுகின்றேன் என லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
மாற்றத்தின் தருவாயில் உள்ள இலங்கை அணியை புதிய யுகத்தை நோக்கி தன்னால் வழிநடத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணியில் திறமையான பந்து வீச்சாளர்கள் இல்லைஇ அவர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுகின்றார்கள் இல்லை என குறிப்பிட்டுள்ள லசித் மலிங்க ஒரு வருடம் ஒன்றரை வருடத்திற்குள் அனைத்தையும் சரிசெய்ய முடியும் என கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ள லசித் மலிங்க அடுத்த தெரிவுக்குழுவில் இடம்பெறுபவர்கள் யார் என்றாலும் அவர்கள்இ சிறப்பான வீரர்களை அணிக்கு தெரிவு செய்வது முக்கியம் வெளியில் அவர்களை வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணரவேண்டும் எனவும் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
என்னால் இளம் வீரர்களிற்கு எதனையாவது வழங்க முடியும் என நான் கருதினால் நான் அணியில் இடம்பெற வேண்டும்இ இதன் காரணமாக இப்படித்தான் விளையாட வேண்டும் என்பதை நான் அவர்களிற்கு தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணியில் இடம்பெறாவிட்டால் என்னால் இப்படித்தான் விளையாட வேண்டும் என்பதை அவர்களிற்கு தெரிவிக்க முடியாது எனவும் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment