ஐய்யப்பன் கோயிலுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் - பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம் - Yarl Voice ஐய்யப்பன் கோயிலுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் - பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம் - Yarl Voice

ஐய்யப்பன் கோயிலுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் - பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்


ஐய்யப்பன் கோயிலுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி சபரிமலையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ள கும்பல்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அறிவிக்குமாறு கேரள டி.ஜி.பி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் அண்டை மாநில பொலிஸாருக்கும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாநிலத்தின் அனைத்து கடற்கரைகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பயங்கரவாதிகள் ஊடுருவாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post