வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தொடரும் குழப்பம் - Yarl Voice வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தொடரும் குழப்பம் - Yarl Voice

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தொடரும் குழப்பம்


வலி.வடக்கு பிரதேச சபையில் கடந்த அமர்பில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி வாக்கெடுப்பிற்கு விடாமலே நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் இன்றைய சபை அமர்பில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது.

வலி.வடக்கு பிரதேச சபையின் நபவம்பர் மாதத்திற்கான பொது கூட்டம் நேற்று சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் சபை அமர்வின் போது ஏற்பட்ட குளப்பமான நிலையால் சபை மண்டபத்திற்கு பொலிஸார் வரவளைக்கப்பட்டனர்.

 இதனால் சபை கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளியேறியிருந்த நிலையில்இ உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்களையும் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

குறித்த தீர்மானங்கள் சபையின் அனைத்து உறுப்பினர்களும் இல்லாத சமயம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது. எனவே அதனை நிராகரிப்பதாக தெரிவித்தனர்.

உறுப்பினர்களின் இக் குற்றச்சாட்டை அடுத்து ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானத்தையும்இ ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற வாக்கெடுப்பு சபை உறுப்பினர்களிடையே நடத்தப்பட்டது.

இதன் போது குறித்த 17 தீர்மானங்களையும் தாங்கள் நிராகரிப்பதாக 18 உறுப்பினர்கள் வாக்களித்து அத்தீர்மானங்களை நிராகரிக்கச் செய்திருந்தனர்.

இருப்பினும் குறித்த 17 தீர்மானங்களையும் நிராகரிக்க கூடாது என்று சபையில் இருந்த 16 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post