சமூகவலைத்தளங்களில் வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் - Yarl Voice சமூகவலைத்தளங்களில் வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் - Yarl Voice

சமூகவலைத்தளங்களில் வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம்


சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தான் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் முடிவுகள் எனக் கூறி பல தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அனைத்து செய்திகளும்இ முடிவுகளும் ஜனாதிபதியின் அலுவலகம் அல்லது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மற்றும் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களில் மட்டும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post