அ.தி.மு.க.வில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் என்றும் இல்லை - பன்னீர்செல்வம் - Yarl Voice அ.தி.மு.க.வில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் என்றும் இல்லை - பன்னீர்செல்வம் - Yarl Voice

அ.தி.மு.க.வில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் என்றும் இல்லை - பன்னீர்செல்வம்


அ.தி.மு.க.வில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் என்றும் இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் ''தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மிக வலிமையாக நடைபெறுகிறது. நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்று கொண்டிருக்கிறன.

நாட்டின் வளர்ச்சிக்கும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் என்ன தேவையோ அதை அளித்து வருகிறோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறு சரிவு ஏற்பட்டது. ஆனால் அது வேலூர் தேர்தலில் சரி செய்யப்பட்டது. இடைத் தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் என்றும் அ.தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என்று மக்கள் காண்பித்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் என்றும் இல்லை'' எனக் கூறினார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post