அரியாலையில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப்பணி - Yarl Voice அரியாலையில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப்பணி - Yarl Voice

அரியாலையில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப்பணி


யாழ்ப்பாணம் - அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளதாக தெரிவித்து அகழ்வு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு தெய்வீகன்இ அப்பன் மற்றும் கோபி ஆகிய போராளிகள் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்டனர்.


அவர் மூவரும் அரியாலை தபால் கட்டைச் சந்திக்கு அண்மையாக உள்ள வீட்டில் தங்கியிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தமது கட்டுப்பாட்டுக்கள் வீட்டை வைத்திருந்தனர். தற்போதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே அந்த வீட்டை தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டில் பெரியளவிலான ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதுதொடர்பில் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

இதன்படி யாழ் பொலிஸாரால் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த வீட்டில் அகழ்வு நடாத்த அனுமதி பெறப்பட்டது.

அனுமதி பெறப்பட்ட சில மணித்தியாலங்களில் இராணுவம் பொலிஸ் இணைந்து குறித்த வீட்டில் அகழ்வு நடவடிக்கைகளை ஆர்ம்பித்துள்ளனர்.

வீட்டின் அறைகளின் நிலங்கள் தோண்டப்பட்டு குறித்த அகழ்வு நடை பெற்று வருகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post