புதிய ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்சவிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விடுத்துள்ள கோரிக்கை
மனிதர்களை மதிக்காத, மனித உரிமைகளை துச்சமாக மதிக்கின்ற, மனித மாண்புகளை நினைக்காக ஒருவரான கோத்தபாய ராஐபக்ச ஐனாதிபதியாக வந்திருக்கின்றார் என்ற அச்ச உணர்வு தமிழ் மக்கள் ஏற்பட்டிருக்கின்றது. ஆகையிhல் தமிழ் மக்களின் இந்த அச்ச உணர்வை சரியாக அவர் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
பயமுறுத்தல்கள் அல்லது அடிமைப்படுத்தல்களுக்கு ஊடாக ஒரு இனத்தை அடக்கி வைத்திருக்கலாம் என்று யாரும் நினைத்தால் அந்த நிலைமைகள் எங்கேயும் நிலைத்ததாக வரலாறுகள் இல்லை. அதனை அவர் உணர்ந்து கொண்டு தனது செயற்பாடகளை முன்னெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட சிறிதரன் நாங்கள் தொடர்ந்தும் பயந்தும் அடிமைகளாக வாழ முடியாது என்றார்.
கோட்டா என்றால் பயம் எனும் அச்ச உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. ஏனென்றால் கடந்த காலங்களிலே வெளிளைவான்களிலே கடத்துவது, ஆட்களை கைது செய்வது, கொலைகளைப் புரிவது. ஏன்று தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக தேர்தல் நேரத்தில் கூட கோத்தபாயவின் வெள்ளை வான் சாரதிகள் என இரண்டு சாரதிகள் கூட வெள்ளைவான் தொடர்பில் பல்வேறு விடயங்களைச் சொல்லியிருந்தார்கள். அதாவது வெள்ளை வான்களில் தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று கொலை செய்து குளங்களிலே முதலைக்கு போட்டிருந்ததாக கூறியிருந்தார்கள்.
ஆக மனிதரக்ளை மதிக்காத, மனித உரிமைகளை துச்சமாக மதிக்கின்ற, மனித மாண்புகளை நினைக்காத ஒருவர் இந்த நாட்டின் தலைவராக வந்திருக்கின்றார் என்ற எண்ணம் தான் இன்று தமிழர்களிடம் இருக்கிறது. ஆகவே இதை அவர் சரியாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். ஆகையினால் திரும்பவும் ஒரு வெள்ளைவான் கலாச்சாரம், இளைஞர்கள் சுதந்திரமாக தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை கடத்தல்கள் போன்றவை நடைபெறுமென்ற என்னனம் தமிழர்களிடம் மேலோங்கியிருக்கிறது.
இதைவிடக் குறிப்பாக நாங்கள் பார்த்தால் வடகிழக்கில் பரவலாக இரர்னுவம் குவிக்கப்பட்டுள்ளமை, இரானுவ முகாம்கள் இன்னும் அகற்றப்படவில்லை. தமிழர்களுடைய நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. அந்த விடுவிக்கப்படாத நிலங்கள் இரானுவ முகாம்கள் எல்லாம் அவ்வாறு இருக்கிற சூழ்நிலையிலே திரும்பவும் இரானுவ ரீதியான செயற்பாடு வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலைப் பார்க்கிற பொழுது அந்த அச்ச உணர்வு இன்னும் பலப்படுத்தப்படுகிறது.
ஆகவே இதனை சரியான முறையில் அனுகத் தவறினால் அல்லது இதற்கு ஒரு தீர்வைக் காண அவர் முனையாத வரையில் இந்த அச்ச உணர்வைப் போக்க முடியாது. இதனை விடுத்து காலி முகத்திடலிலே மிக எளிமையாக அதுவும் வீதிகளைக் கூட மறிக்காமல் சத்தியப் பிரமாணம் செய்தார் பதவிகளை ஏற்றுக் கொண்டார் என்ற செய்திகளை வெளியிலே சொல்வதுடன் மட்டும் நின்று விடாது உண்மையான பாதுகாப்பான அச்ச உணர்வில்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும்.
அதாவது இந்த நாட்டிலே வாழ்கின்ற அனைத்த இனங்களும் அவருடைய காலத்திலே நிம்மதியாக வாழ்கின்றார்கள் இடைஞ்சல் இல்லாமல் இருக்கின்றார்கள் கைது செய்யப்படவில்லை, கடத்தப்படவில்லை அவர்களது சுதந்திரம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது அவர்கடைய உரிமைகள் பாதுகாக்ககப்பட்டிருக்கிறது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைத்திருக்கிறது என்ற எண்ணங்கள் வருகிற பொழுது தான் அந்தச் செய்திகள் சரியானதாக அமையும்.
ஆனால் அவரால் நியமிக்கப்பட்டிருக்கிற பாதுகாப்புத் துறைச் செயலாளர் கமால் குணரட்ன போன்றவர்கள் மிகக் கொடுரமான மனிதர்களாக இந்த நாட்டிலே; வர்ணிக்கப்படுகின்றவர்கள். இதனை விட அவர் நியமித்திரு;கின்ற துறைசார்ந்த செயலாளர்கள் கூட எவ்வளவ தூரம் இந்த மண்ணிலே எல்லா இனங்களையும் அரவணைத்துப் போகின்றவர்களாக அமைவார்கள் என்று இந்தச் சூழ்நிலைகளையெல்லாம் பொறுத்திருந்து தான் நாங்கள் பார்க்க வேண்டும்.
ஆனாலும் பயமுறுத்தல்களுக்கு ஊடாக அல்லது அடிமைப்படுத்தல்களுக்கு ஊடாக ஒரு இனத்தை அடக்கி வைத்திருக்கலாம் என்று யாரும் நினைத்தால் அந்த நிலைமைகள் எங்கேயும் நிலைத்ததாக வரலாறுகள் இல்லை. ஆகவே நாங்கள் ஒரு விடயத்தை கவனத்தில் எடுக்கிறோம். அதாவது பயமான சூழல் தமிழ் மக்களிடம் இருக்கிறது. அந்த பயந்த சூழலிலிருந்த விடுபடுவதற்கான பாதைகளையும் நாங்கள் தேடிக் கொள்ளுவோம். ஏனென்றால் நாங்கள் தொடர்ந்தும் பயந்தும் அடிமைகளாக வாழ முடியாது என்றார்.
Post a Comment