சுவீடனில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹார்ட்லி கல்லூரி மாணவன் - Yarl Voice சுவீடனில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹார்ட்லி கல்லூரி மாணவன் - Yarl Voice

சுவீடனில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹார்ட்லி கல்லூரி மாணவன்


சுவீடனில் போராஸ் நகரில் நடைபெற்ற கிங் ஒவ் த ரிங் ( KING OF THE RING 2019) சர்வதேச குத்துச்சண்டை கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஐரோப்பாவில் வருடந்தோறும் பாடசாலை மாணவர்களுக்காக நடைபெறுகின்ற பெரிய குத்துச்சண்டைப் போட்டித் தொடரான கிங் ஒவ் த ரிங் சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிகள் சுவீடனின் போராஸ் உள்ளக அரங்கில் கடந்த 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்றன.

குறித்த போட்டித் தொடரில் பங்குபற்றிய கண்டி திருத்துவக் கல்லூரி மாணவனான அத்தாப் மன்சில் மற்றும் கண்டி வித்யார்த்த கல்லூரி மாணவன் சுபான் ஹன்சஜ ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கங்களை வெற்றி கொண்டனர்.

இதில் சுவீடன் இங்கிலாந்து நோர்வே பின்லாந்து போர்த்துக்கல் ஸ்கொட்லாந்து உகண்டா கனடா இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 இற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் ஷானுஜன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இலங்கை பாடசாலை மாணவர்கள் சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியொன்றில் கலந்துகொள்வது இதுவே முதல்தடவையாகும்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post