சஜித்தின் தோல்விக்கு கூட்டமைப்பும் காரணம் - சிறிதரன் எம்பி - Yarl Voice சஜித்தின் தோல்விக்கு கூட்டமைப்பும் காரணம் - சிறிதரன் எம்பி - Yarl Voice

சஜித்தின் தோல்விக்கு கூட்டமைப்பும் காரணம் - சிறிதரன் எம்பி


ஐனாதிபதித் தேர்தலில் சஐpத் பிரேமதாசாவின் தோல்விக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளும் காரணமாக இருக்கலாமெனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அதே போல சஐpத்தின் செயற்பாடகளும் மற்றும் அவர் சார்ந்த கட்சியினதும் செயற்பாடுகளும் காரணமாக அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழிலுள்ள தனது இல்லத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இதன் போது ஐனாதிபதித் தேர்தலில் சஐpத் பிரேமதாசாவிற்கு கூட்டமைப்பு பகிரங்க ஆதரவை வழங்கியதாலேயே அவர் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

சஐpத்தின் தோல்விக்கு கூட்டமைப்பின் நிலைப்பாடும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் கடந்த காலங்களில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவித்தவிட்டு இருந்தோம். அதே நேரத்தில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவை அளித்தவிட்டு மேடையில் ஏறி பேசவில்லை.

ஆனால் இம் முறை சஐpத் பிரேமதாசா அவர்களிற்காக மேடை மேடையாக ஏறி அவருக்கு வாக்களியுங்கள் என்று அவருடைய பதாகையைக் கட்டி அவருக்கு ஆதரவாக நாங்கள் செய்த பிரச்சாரம் தென்பகுதியிலே வேறு விதமாக கொண்டு செல்லப்பட்டது. அதனால் அங்கு இனவாத ரீதியான கண்ணோட்டத்தில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன

குறிப்பாக தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிரான தேர்தல் இது என்றும் சிங்கள மக்களே கிளர்ந்தெழுங்கள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆக இத் தேர்தல் சஐpத்தா, கோத்தாவா என்று பார்க்காமல் தமிழனா சிங்களவனா என்று பார்க்கின்றது போலவே தெற்கில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

குறிப்பாக எமது கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் பேசிய பேச்சைக் கூட அங்குள்ள சிங்கள ஊடகங்கள் இத் தேர்தலில் சிங்கள் மக்களுக்கு ஒரு பாடத்தை படிப்பியுங்கள் அதற்காக சஐpத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசியது போலவே தோற்றப்பட்டை சிங்கள மக்களிடம் கொடுத்திருந்தார்கள்.

ஆகவே அடிப்படை இனவாத அடிப்படையில் இருக்கின்ற சிங்கள மக்களிடம் இந்தப் பிரச்சாரங்கள் இனவாதத்திற்கு இன்னும் எண்ணெய் ஊற்றி தீயாக எரியவிடப்பட்டது. அதனால் தான் சஐpத் பிரேமதாசாவிற்கு எதிரான தோல்வியொன்று மிகக் கடுமையானதாக ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் சஐpத்தின் தோல்விக்கு இன்னும் பல காரணங்களும் இருக்கத் தான் செய்கின்றன.

குறிப்பாக அவருடைய கட்சிக்குள்ளேயே பலவீனங்கள் பல இருந்திருக்கிறது. அதிலும் அவர் சார்ந்த கட்சியின் தலைமைத்தவதற்திற்கு அவர் தேர்தல் காலத்திலே கொடுத்த செயற்பாடுகள் பெரிய அளிவிலே அவருக்கு வாய்ப்பாக அமையவில்லை. அதே நேரம் அவரின் தலைமைத்தவதுவமும் வெறிக்காக பாரிய  அளிவிலான பங்களிப்பை செய்யதா ன்பதெல்லாம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவரது கட்சிக்குள்ளேயே பல்வேறுபட்ட நெருக்கடிகள் அவருடைய அரசியல் தோல்விக்கு காரணமாக இருக்கின்றன. ஆனால் நாங்கள் ஒரு கட்சி ரீதியாக குறிப்பாக என்னுடைய வார்த்தையிலே அவருடைய கட்சி இவர் தான் வேட்பாளர் என்று தீர்மானம் எடுப்பதற்கு முதலே அவர் தன்னை ஒரு வேட்பாளராக அறிவித்து பல இடங்களிலே கூட்டங்களை நடாத்தியிருந்தார். அது கூட அவருக்கான தோல்விக்கான அறிகுறியாக முதலே தொடங்கப்பட்டுவிட்டது.

இதனை விட ஏப்ரல் 21 நடந்த தமிழர்கள் மீதான தாக்குதல் நடாத்தப்பட்டது. ஆனால் அந்த தாக்குதலின் பின்னர் அது ஒரு சிங்கள இனவாத வெற்றிக்காக இடப்பட்ட அடித்தளமாகவே தெற்கில் பார்க்கப்பட்டது. இலங்கையிலே காணப்படுகின்ற பௌத்த சிங்கள மக்களுக்கு முஸ்லீம்களால் விடுக்பபட்ட அச்சுறுத்தல் என்ற செய்தி தான் வெளியிலே சொல்லப்பட்ட பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் பௌத்த சிங்களவர்கள் யாரும் அங்கு மரணத்தை தழுவவில்லை. இறந்தது முழுவதுமே தமிழ் கிறிஸ்தவர்கள் தான்.

ஆனாலும் அந்த சம்பவத்தின் பின்னர் இதற்கான அடித்தளமிடப்பட்டு இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு தேசிய உணர்வு என்ற எண்ணங்களோடு கோட்டாபாய ராஐபக்ச தலைமையிலான பொது ஐன பெரமுன கட்சியினர் பெரிய அரசியல் பரப்புரையை மேற்கொண்டிருந்தார்கள். இதற்குப் பிண்ணணிகள் பல இருக்கலாம். அதே போல அரசியல் நடவடிக்கைகள் பல இருக்கலாம். ஆனாலும் கூட இவற்றையெல்லாம் கடந்து இந்தக் கால கட்டத்திலே அவர்கள் அரசியல் வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.

அவ்வாறு பெற்ற வெற்றியை அவர்கள் எல்லா இனங்களும் அதாவது இந்த நாட்டிலே வாழ்கின்ற அனைத்து தேசிய இனங்களும் அனுபவிக்கக் கூடிய வகையில் கொண்டு செல்வது தான் ஒரு ஐனநாயக நீதியான அரசியலுக்கு பொறுப்புக் கூறக் கூடிய வகையிலே அமையும் என மேலும் தெரிவித்தார்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post