சீனாவிற்கு உளவு வேலை பார்த்த அமெரிக்க அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கி தீர்ப்பு - Yarl Voice சீனாவிற்கு உளவு வேலை பார்த்த அமெரிக்க அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கி தீர்ப்பு - Yarl Voice

சீனாவிற்கு உளவு வேலை பார்த்த அமெரிக்க அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கி தீர்ப்பு


சீனாவுக்காக உளவு வேலை பார்த்த அமெரிக்க முன்னாள் அதிகாரிக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறையில் ஊஐயு அதிகாரியாக இருந்தவர் 55 வயதாக ஜெர்ரி சுன் ஷிங் லீ . இவருக்கு நாட்டின் முக்கிய இராணுவ இரகசியங்கள் தெரியும்.

இவர் மூலமாக சில முக்கிய இராணுவ இரகசியத் தகவல்களை பெறுவதற்காக சீனா தரப்பில் 1 இலட்சம் டொலர் பணம் தருவதாக விலை பேசியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ஒத்துழைப்புக்காக ஆயுட்காலம் முழுவதும் கவனித்துக் கொள்வோம் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஜெர்ரி சுன் ஷிங் லீ இணங்கினார். சீனாவுக்காக உளவு வேலை பார்த்து முக்கிய தகவல்களை அளித்துள்ளார். அவர் சீன தரப்பில் பெற்ற இலஞ்ச பணத்தை வங்கியில் வைப்புச் செய்த நிலையில் அமெரிக்கா கண்டுபிடித்தது.

இதைத் தொடர்ந்து லீ கைது செய்யப்பட்டு அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது தன் மீதான உளவு குற்றச்சாட்டுகளை லீ ஒப்புக்கொண்டார்.

சி.ஐ.ஏ. வழக்கு அதிகாரியாக 13 ஆண்டுகால வாழ்க்கையில் இருந்த அனைத்து தகவல்களையும் லீ சீனாவக்கு கொடுத்திருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக லீ இற்கு சிறைத்தண்டனை கோரினர்.

எனினும் லீ பெற்ற பணம் சீனாவிலிருந்து வந்தது என்பதை அமெரிக்க அரசாங்கம் ஒருபோதும் நிரூபிக்கவில்லை அல்லது அரசாங்கத்தின் இரகசியங்களை வழங்குவதற்கான எந்தவொரு திட்டத்தையும் லீ இதுவரை செய்யவில்லை என குறிப்பிடப்பட்ட நிலையில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post