எதிர்வரும் தேர்தலில் தனித்து களமிறங்கும் சஜித் அணி
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுயாதீனமாக செயற்பட தீர்மனித்துள்ளனர்.
அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கும் படியான கோரிக்கையையும் அவர்கள் சபாநாயகரிடம் முன்வைக்கவுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளன.
இதனிடையே எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சஜித் பிரேமதாசவுக்கு இடையே போட்டிநிலை நிலவுகிறது.
இந்நிலையில் சஜித் பிரேமதாசவுக்கு அப்பதவி வழங்கப்படவிட்டால் நடாளுமன்றத்திற்குள் சுயாதீனமாக செயற்பட ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் ஆதரவு அணியினர் தீர்மனித்துள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் வரும் பொதுத்தேர்தலில் தனித்து புதிய சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடவும் சஜித் ஆதரவு அணியினர் முடிவெடுத்துள்ளனர்.
Post a Comment