வர்த்தக போரைக் கண்டு அஞ்சப்போவதில்லை - சீனா - Yarl Voice வர்த்தக போரைக் கண்டு அஞ்சப்போவதில்லை - சீனா - Yarl Voice

வர்த்தக போரைக் கண்டு அஞ்சப்போவதில்லை - சீனா


அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் அதே சமயம் வர்த்தக போரைப் கண்டு அஞ்சப்போவதில்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச நிதி ஆணையத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும்இ சீனாவுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக வர்த்தகப் போர் நடந்து வருகிறது. உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சீனா நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும்இ அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களையும்இ தொழில் நுட்பங்களையும் திருடி வருவதாகவும் குற்றம் சாட்டி முதலில் இந்த வர்த்தகப் போரை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆரம்பித்தார்.

இதையடுத்து சீனப் பொருட்கள் மீது அமெரிக்காவும்இ அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் பல்லாயிரம் கோடி டொலர் வரிகளை கூடுதலாக விதித்து வருகின்றன. இதனால் இரு தரப்பு வர்த்தகப் போர் வலுத்து வருகிறது.

அமெரிக்காவும்இ சீனாவும் வர்த்தகப் போரில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும்கூட இரு தரப்புக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த இருநாடுகளின் பிரதிநிதிகள் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் முதன்நிலை வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு தரப்பு பிரதிநிதிகளும் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை ஆக்கப்பூர்வமாக நடந்தாலும் தாங்கள் முன்வைத்த சில கோரிக்கைகளை அமெரிக்க புறக்கணித்ததாக சீனா குற்றம் சாட்டியது. அதே சமயம் சீனா இதுவரை எந்தவிதமான சலுகைகளையும் வழங்கவில்லை என்றும்இ பேரத்தை முடிவுக்கு கொண்டு வர தயங்குவதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபையில் 2 சட்ட வரைபுகள் நிறைவேற்றப்பட்டமை இரு தரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post