புதிய கல்விக் கொள்கை மாநில அரசகளின் உரிமையை பாதிக்கிறது - வைகோ - Yarl Voice புதிய கல்விக் கொள்கை மாநில அரசகளின் உரிமையை பாதிக்கிறது - வைகோ - Yarl Voice

புதிய கல்விக் கொள்கை மாநில அரசகளின் உரிமையை பாதிக்கிறது - வைகோ


புதிய கல்விக் கொள்கை மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்ற ஓர் கொள்கை என ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக்கொள்கை குறித்த  பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்  புதிய கல்விக்கொள்கை குறித்து எத்தனை மாநிலங்களில் விவாதம் நடத்தினீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து வைகோவிற்கும்  மாநிலங்களவைத் தலைவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும்இ அவைத்தலைவரைக் குறிப்பிட்டு பேசிய வைகோஇ 'நாட்டிற்கு நாசம் விளைவிக்கும் இந்தப் புதிய கல்விக்கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? இல்லை. அப்படிப் பெற்றிருந்தால் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன என அறிந்துகொள்ள விரும்புகின்றேன்' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 'இந்தியா முழுவதும் கல்வியாளர்களோடு நாங்கள் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம்' என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் குறித்த கேள்விகளுக்கான நிறைவான பதில் வழங்கப்படாமல் குறித்த விவாதம் நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post