இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் - Yarl Voice இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் - Yarl Voice

இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளர்கள்


இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிம்பாப்வே மற்றும் அவுஸ்ரேலியா அணிகளின் முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இலங்கை அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக சிம்பாப்வேயின் முன்னாள் வீரர் அன்டி பிளவரும் பந்து வீச்சு பயிற்சியாளராக அவுஸ்ரேலியாவின் டேவிட் சகெரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும்இ இந்த நியமனம் இதுவரை உத்தியோகபூர்வமாக இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்படாத போதும் அடுத்த மாதம் இருவரும் அணியுடன் இணைந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில்இ சிம்பாப்வேயின் முன்னாள் வீரர் அன்டி பிளவர் அண்மையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் பேணி வந்த 12 ஆண்டுகால உறவினை முடித்துக் கொண்டிருந்தார்.

சிம்பாவேயின் முன்னணி துடுப்பாட்ட வீரராகவும்இ முன்னாள் அணித்தலைவராக விளங்கிய அன்டி பிளவர் சிம்பாவே ஜனாதிபதியின் நிறவெறி கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிம்பாவே தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் இணைந்து கொண்டு இங்கிலாந்து தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் துணைப்பயிற்றுவிப்பாளர் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் என தனது பணியைத் தொடர்ந்திருந்தார்.

இவரின் பயிற்சியின் கீழேயே இங்கிலாந்து அணிக்கு முதல் ஐசிசி உலகக்கிண்ணமான 2010ஆம் ஆண்டின் 'ரி-20' உலகக் கிண்ணம் கிடைத்தது.

அதுபோலஇ 1986-87ஆம் ஆண்டு பருவ காலத்திற்கு பின்னராக 2010-11ஆம் ஆண்டு பருவகாலத்தில் இங்கிலாந்து அணி அவுஸ்ரேலியாவில் ஆஷஸ் தொடரை வென்றிருந்தது.

2013-14ஆம் ஆண்டு பருவகாலத்தில் ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட பெரு வீழ்ச்சியைத் தொடர்ந்து அன்டி பிளவர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

பின்னர் இங்கிலாந்து லயன்ஸ் கழக அணிக்காக தொழில்நுட்ப இயக்குராக கடமையாற்றினார்.

இதேபோல அவுஸ்ரேலியாவின் விக்டோரியாவை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டேவிட்சகெர் இங்கிலாந்து அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இங்கிலாந்தின் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ள அவர் இங்கிலாந்தின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அணியை உருவாக்குவதில் முக்கியபங்களிப்பை வழங்கினார் என பாராட்டப்படுகின்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post