தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலிருக்கின்ற இன்றை சூழ்நிலையில் நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவதற்கான சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வைக் காணாமல் இந்த அரசாங்கமோ அல்து எந்த அரசாங்கத்திலோ அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வது தமிழ் மக்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும்.
இவ்வாறு தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஒரு அரசியல் தீர்வில்லாமல் தமிழர்களிற்கான நிரந்த அதாவது அவர்களுடைய தேசிய அபிலாசைகள் புர்த்தி செய்யக் கூடியதான உரித்துக்களை சரியான முறையில் பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில் ஒரு தீர்வை இந்த அரசுகள் முன்வைக்காத நிலைiயில் நாங்கள் மத்திய அரசுடன் அமைச்சுப் பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளல் என்பது; இயலாமையின் வெளிப்பாடாகவே அமையுமே தவிர இயலாதவன் செய்கின்ற காரியமாக முடியும் என்பதால் அவ்வாறான அரசியல் நடவடிக்கையில் நாங்கள் இப்போதைக்கு இறங்கக் கூடிய வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்றார.
யாழிலுள்ள தனது இல்லத்தில் இன்று புதன்கிழமை ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இதன் போது கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அமைச்சுப் பதவிகளைப் பெறத் தயார் என அறிவித்துள்ள விடயம் குறித்து ஊடகவியிலாளர்கள் எழுப்பிய கௌ;விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெறுவது குறித்து சுமந்திரன் சொன்ன கருத்திற்கு ஒரு காரணம் இருக்கலாம். சில வேளை இது தொடர்பில் மக்கள் என்ன கருத்தக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று மக்களிடம் ஆராய்விற்காக இந்தக் கருத்தை முன்வைத்திருக்கலாம். அல்லது இப்படி ஒன்றைச் சொல்லிப் பார்ப்பதன் மூலம் என்ன விளைவுகள் வருகிறதென்பதை ஆராய்வதற்காகவும் இருக்கலாம்.
ஆனால் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதென்ற விடயத்தில் ஒரு யதார்த்தம் இருக்கிறது. அது எப்படியென்றால் நாங்கள் 60 ஆம் அண்டுகளில் இவ்வாறு அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்தவர்கள். குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பதவி வகித்த போது அவர்களது அமைச்சுக்களின் செயலாளர்களே அவர்களுக்குக் கட்டுப்படாமல் இருந்ததால் அந்தப் பதவிகளை தாமாகவே இராஐனாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆகவே நாங்கள் கடந்த காலங்களில் அவ்வாறான அனுபவங்களை; கொண்டவர்கள்.
இலங்கையிலே முதன் முதலில் சிங்கள தேசிய இனத்தோடு தமிழ் தேசிய இனம் தான் அமைச்சுப் பொறுப்புக்களை பகிர்ந்து கூட இணக்க அரசியலுக்கான முன்மொழிவுகளை முதல் வழிகாட்டுதல்களைச் செய்திருந்தது. ஆனால் அதனைச் சரியாக சிங்கள தேசிய இனத்தவர்கள் செய்யவில்லை. ஆக அவர்கள் சிங்களப் பேரினவாத எண்ணங்களோடு இருந்தவர்கள் என்பதால் எங்களோடு அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
ஆனாலும் அன்றிருந்தது போன்று நிலைமைகள் இப்ப இல்லை. இப்போது இருக்கிற சூழல் அதுவுமல்ல. நாங்கள் ஒரு நீண்ட யுத்தத்திற்குப் பிற்பாடு கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீர்களை இந்த மண்ணில் விதைத்திருக்கிறோம் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொல்ப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருக்கின்றார்கள். நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. இப்பொழுதும் தமிழர்கள் அகதிகளாக இருக்கின்றார்கள். அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதனை விட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களிற்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை. nஐனிவாவிலே அதற்கான பிரேரனைகள் கொண்ட வரப்பட்டு கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றது.
இவ்வளவு சூழல்களும் இங்கே இருக்கிற நிலையில் நாங்கள் போய் அமைச்சர்களாக பதவியேற்ற பிற்பாடு அந்த அமைச்சுப் பதவியில் இருக்கிற பொழுது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களிற்கான நீதி கிடைக்குமா அல்லது விடுவிக்கப்படாத நிலங்கைள விடுவிப்பார்களா அல்லது அரசியல் கைதிகளை விடுதலை செய்வார்களாக வடகிழக்கில் இரானுவத்தை குறைப்பார்களாக என்ற பல கேள்விகள் இருக்கின்றன.
இந்த விடயங்கள் எல்லாம் நடக்காத சூழலில் நாங்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கக் கூடிய சாத்தியப்பபாடுகள் எதுவம் இல்லை. ஆனால் இப்படியான கருத்துக்களை சில வேளைகளில் அரசியல் கட்சியின் பேச்சாளர் என்ற வகையில் அவர் முன்வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் இந்த அரசாங்கத்திலோ அல்லது எந்த அரசாங்கத்திலேனும் கூட அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வது தமிழ் மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.
ஒரு அரசியல் தீர்வில்லாமல் தமிழர்களிற்கான நிரந்த அதாவது அவர்களுடைய தேசிய அபிலாசைகள் புர்த்தி செய்யக் கூடியதான உரித்துக்களை சரியான முறையில் பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில் ஒரு தீர்வை இந்த அரசுகள் முன்வைக்காத நிலைiயில் நாங்கள் மத்திய அரசுடன் அமைச்சுப் பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளல் என்பது எங்களுடைய மக்களுக்கான அதாவது நான் நினைக்கிறேன் இயலாமையின் வெளிப்பாடாகவே அமையுமே தவிர இயலாதவன் செய்கின்ற காரியமாக முடியும். ஆகவே அவ்வாறான அரசியல் நடவடிக்கையில் நாங்கள் இப்போதைக்கு இறங்கக் கூடிய வாய்ப்புக்கள் எதுவும் இல்லை என்றார்.
Post a Comment