ஆட்சி மாற்றத்தையடுத்து அரசியலுக்கு குட்பை சொல்லும் முக்கிய பிரமுகர்
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அரசியலில் இருந்து ஓய்வுபெற்று அடுத்தமாதம் இங்கிலாந்துக்கு குடிபெயரவுள்ளதாகவும் அதேபோன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரான மலிக் சமரவிக்கிரமவும் அரசியலில் இருந்து ஓய்வுபெற்று வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடவுள்ளதாகவும் கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த தகவல்களின்படி மங்கள சமரவீர லத்தீன் அமெரிக்க நாடொன்றுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் கட்சி அரசியலில் இருந்து விலகி அனைத்து இலங்கையர்களின் நல்லிணக்கத்துக்காகவும் செயற்பட மங்கள சமரவீர தீர்மானித்துள்ளதாகவும் The Leader என்ற ஆங்கில பத்திரிகை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக இந்த இரு அமைச்சர்களும் அயராது பாடுபட்ட முக்கய நபர்களாவர்.ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் தமது பதவிகளில் இருந்து விலகிய முதல் நபர்களும் இவர்கள்தான்.
அத்துடன் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டங்களிலும் அவர்கள் இதுவரை பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment