பால்நிலை வன்முறைக்கு எதிரான புதிய செயற்திட்டம் யாழில் இன்று ஆரம்பம்
பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயல் திட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யூ.என்.ஏச்.சி.ஆர் மற்றும் பிரிட்டிஸ் கவுன்சிலின் அனுசரணையுடன் சமூக செயற்பட்டு மையத்தினால் நடத்தப்படும் இச் செயல்திட்டத்தை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்இ சமூக செயற்பாட்டு மையத்தின் அலுவலகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கும்இ சிறுவர்களுக்கும் சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான சூழலை உருவாக்குவோம் என்னும் தொணிப் பொருளில் நடத்தப்படும் இச் செயற்றிட்டம் இன்று முதல் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதிவரை ஒவ்வொரு பிரதேச செயலகம் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.