இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - Yarl Voice இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - Yarl Voice

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க எடுத்துள்ள முக்கிய தீர்மானம்


இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அ.தி.மு.க.வின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க. பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பலஸ் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
இருமொழிக் கொள்கை மாநில சுயாட்சி அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அ.தி.மு.க. அரசு பயணிக்கும் என்பதில் உறுதி.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post