13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த முடியாது - 19 ஆவது திருத்தத்தை நீக்குவேன் - கோத்தபாய அதரடி - Yarl Voice 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த முடியாது - 19 ஆவது திருத்தத்தை நீக்குவேன் - கோத்தபாய அதரடி - Yarl Voice

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த முடியாது - 19 ஆவது திருத்தத்தை நீக்குவேன் - கோத்தபாய அதரடி


எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனஇ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இந்தியாவின் தி ஹிந்து ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த திருத்தமானது வெற்றியளிக்காத ஒன்று என்றும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன்இ அரசிலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும்இ அதிலுள்ள சில விடயங்கள் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும்இ மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கவேண்டும் என்ற விடயத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்றும்இ இதற்கான மாற்று வழியொன்றை யோசிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகப்பட்ட அதிகார பரவலாக்கல் என்ற விடயத்தை நிறைவேற்றுவதில் பெரும்பான்மை (சிங்கள) மக்களுக்கு விரும்பம் இல்லையென்றும்இ  அவ்வாறு செயற்படுவது அவர்களின் விருப்பத்துக்கு மாறானது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனினும்இ பிரசேதங்களுக்கான அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எந்தவித எதிர்ப்புகளும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தான் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் 5 வருடங்களின் பின்னர் ஆராய்ந்து பார்க்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஇ தேசிய பாதுகாப்பு விவகாரங்களில்இ குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த இஸ்லாமிய அரசின் அச்சுறுத்தல் குறித்து இந்தியாவுடன் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகாரங்களை மாற்றுவது 'விவாதிக்கப்பட வேண்டும்' என்றாலும்இ 19 வது திருத்தம் ஒரு 'தோல்வி' என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஜனாதிபதி அது அகற்றப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். வேண்டும்.

'நீங்கள் குடும்பத்தில் டெர்மினேட்டர் என்று அழைக்கப்படுவது உண்மையா?'எனஇ ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதிஇ 'சிறுவயதில் எது குடும்பத்தில் அப்பாவியான சிறுவன் நான். இராணுவத்தில் நான் இணைந்த போதுஇஎனது சகோதரர் மஹிந்த இராணுவத்தில் சேர்ந்திருக்க வேண்டும் என்றும்இ நான் அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றே குடும்பத்தினர் கூறினார்கள்' என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post