தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவிற்குச் சென்ற இலங்கை ஐனாதிபதியிடம் இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ளதை வரவேற்றுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அதற்காக இந்தியாவிற்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இனப்பிரச்சனை இல்லை அபிவிருத்தி மட்டுமே போதும் என்ற தோரணையில் இருக்கின்ற புதிய ஐனாதிபதி கோத்தபாய 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ள அக் கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் அவ்வாறு 13 ஆவதையாவது முதலில் அமுல்ப்படுத்தினால் தமிழ் மக்களின் நம்பிக்கையைம் ஐனாதிபதி பெற்றுக் கொள்ள முடியுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இதன் போது இலங்கை ஐனாதிபதியின் இந்திய விஐயம் குறித்து எழுப்பப்ட்ட கேள்விக்குப் பதலிளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது..
இலங்கையின் புதிய ஐனாதிபதி தனது முதலாவது விஐயமாக இந்தியாவிற்குச் சென்றிருக்கின்றார். இந்தியப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உட்பட பாதுகாப்புச் செயலாளர் என பல முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் பொழுது இலங்கை இந்தியாவின் பொருளாதார நிலைமைகள,; இந்து சமுத்திர பிராந்தியத்தை ஒரு சமாதான வலயமாக மாற்றுவது, இந்தியா இலங்கையினுடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பல விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது.
இதற்கும் மேலாக இலங்கைத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு இப்பொழுது இருக்கக் கூடிய 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனறும் இந்தியத் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ஈழத் தமிழர் பிரச்சனையில் தமது அக்கறையை காட்டியதற்காகவும் ஈழத்தமிழர் பிரச்சனை என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை இலங்கை ஐனாதிபதிக்கு உணர்த்தியத்ற்காகவும் பத்திரிகையாளர் மத்தியில் அந்த விசயங்களை வெளிப்படையாகக் கொண்டு சென்றதற்காகவும் இந்திய பிரதமருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் நாங்கள் எங்களது நன்றிகளை முதலாவதாக தெரிவித்துக் கொள்ள விரும:புகின்றோம்.
ஆனால் ஏற்கனவே இந்த 13 ஆவது திருத்தத்தில் பல்வேறுபட்ட அம்சங்கள் நடைமுறைக்கு வரவில்லை என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். Nஐ.ஆர்.nஐயவர்த்தன அவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தததன் பிற்பாடு முதன்முதலில் ஏற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையில் அப்பொழுது பொலிஸ் படையயொன்று உருவாக்கப்பட்டது. அது தமிழ் மக்கள் சார்ப்hக உருவாக்கப்பட்டது. ஆனால் வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டவுடன் அந்தப் பொலிஸ் படையும் கலைக்கப்பட்டு விட்டது.
இப்பொழுது 13 ஆவது திருத்தச் சட்டத்தை பார்த்தீர்களாக இருந்தால் மாகாணங்களுக்கு குறைகக்பபட்ட வகையில் பொலிஸ் அதிகாரங்கள் இருக்கிறது. அதே போல மாகாணங்களுக்கு சொற்பமான அளிவில் காணி அதிகாரங்களும் இருக்கிறது.
இவை எதவும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதே போல் கல்வியை எடுத்தக் கொள்வீர்களானால் மாகாண சபைகள் தங்களுக்கான ஆசிரியர்களை அவர்கள் சேர்த்தக் கொள்வதற்கும் அவர்களுக்கான அனுமதி இருக்கிறது. இப்பொழுது பார்த்தால் ஆசியரியர்களை இணைத்தக் கொள்வதென்பது இன்னும் மத்திய அரசின் கல்வி அமைச்சே செய்து கொண்டடிருக்கிறது.
ஆகவே 13 ஆவது திருத்தத்தில் உள்ள அனைத்தும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது முதலாவது விசயம். அதாவது Nஐஆர் nஐயவர்த்தனவிற்குப் பின்னர் வந்த பிரேமதாசா அரசாங்கமோ அவர் இறந்தவுடன் வந்த விஐயதுங்கள் அரசாங்கமோ அதன் பின்னர் வந்த சந்திரிக்கா மற்றும் மகிந்த அரசாங்கமோ இன்றைக்கு இருக்கக் கூடிய அரசாங்கமோ யாரும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
ஆயினும் இந்த 13 ஆவது போதாது என்பது இன்னொரு பிரச்சனை. ஆனால் ஏற்கனவே இருக்கின்ற 13 ஆவதில் உள்ள விசயத்தை கூட நடைமுறைப்படுத்தவில்லை என்பது முதலாவது விசயம். ஆகவே இப்பொழுது இந்திய தரப்பில் இருந்து 13 ஆவது தீரத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் அந்த 13 ஆவதை இவர்கள் நடைமுறைப்படுத்தவார்களா?
ஏற்கனவே மகிந்த ராஐபக்ச அவர்கள் 13 ஆவது திருத்தம் போதாது அதற்கு அப்பால் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கும் அவருக்கு முன்னாள் இருந்த பிரதம மந்திரிகளுக்கும் உலகத் தரப்பிற்குளம் குறிப்பாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கும் கூட சொல்லியிருந்தார் குறிப்பாக நான் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பேன் என்று கூறினார் ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சனை என்று ஒன்று இல்லை. இங்கிருந்த பயங்கரவாத பிரச்சனை ஒழிக்கப்பட்ட விட்டது. அவர்களுடைய பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்தால் போதுமானது.
அபிவிருத்தி அடைந்தால் பிரச்சனைகள் யாவும் தீர்ந்துவிடும் என்றொரு ஒரு கருதுகோளைக்; கெணர்டவராகத் தான் இப்போது இருக்கக் கூடிய ஐனாதிபதி கோத்தபாய இருக்கின்றார். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் அவ்வாறான ஐனாதிபதி தானாக முன்வந்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முற்படுவாரா என்பது கேள்குரிய விசயமாகத் தான் இன்னும் இருக்கிறது.
இதற்கு மேலாக இன்னும் சொல்லப் போனால் இந்த ஐனாதிபதியின் மேல் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.
குறிப்பாக பொது பலசேனா இராவண பலய போன்ற பல்வேறுபட்ட சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் தங்களது அமைப்புக்களைக் கலைக்கப் போவதாகவும் தங்களுக்கு தேவையான ஒருவர் இப்பொழுது ஐனாதிபதியாக வந்திருப்பதாகவும் அவர் பௌத்தத்தையும் சிங்களத்தையும் பாதுகாப்பார் என்ற அடிப்படையிலும் நாங்கள் இனிமேல் பயப்படத் தேவையில்லை என்ற தோரணையில் அவர் மீது அவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.
ஆத்தகைய நிலைமைகள் இருக்கின்ற போது; புதிய ஐனாதிபதி 13 ஆவது திருத்தத்தை முழுiமாக நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக் கொள்வாரா? ஆனாலும் அதனை நiமுறைப்படுத்தும் வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பாராக இருந்தால் அது; நல்ல வியம். உண்மையில் அவ்வாறு செய்வாராக இருந்தால் தமிழ் மக்களின் நம்பிக்கைகளையும் அவர் பெற்றுக் கொள்ளவதாக இருக்கும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நிச்சயமாக இதே பிரச்சனைகள் தொடர்ந்தும் போய்கொண்டிருக்கத் தான் செய்யும் என்றார்.
Post a Comment