யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்னும் 19 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தேவைப்படுவதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(கானி) முரளிதரன் தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தலைமையில் இன்று காலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் குறித்த கோரிக்கையை மேலதிக அரசாங்க அதிபர் முன்வைத்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடப்பாண்டில் வழங்கப்பட்டுள்ள வீட்டு திட்டத்தின் பணிகள் யாவும் நிதிகள் கிடைக்காமையினால் தடைப்பட்ட நிலையில் உள்ளன. நிதிகள் விடுவிக்கப்படாமல் வீடுகள் முழுமையாக படாமல் தேக்கம் அடைந்துள்ளன.
திரைசேரியில் இருந்து திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போரால் பாதிக்கப்பட்ட மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த குடும்பங்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுத் திட்டங்களை வழங்கியுள்ளோம் அவ்வாறு வழங்கியுள்ள திட்டங்களில் இன்னும் நீதி விடுவிக்கப்படாமல் உள்ளன இதனால் வீடுகள் கட்டப்பட்டு அரைகுறையாக உள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்தவரையில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் மட்டும் 3000 வீடுகள் தேவையாக உள்ளன ஏனெனில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் மீல்குடியேர்ர பிரதேசமாக காணப்படுகின்றது.
மாவட்ட ரீதியாக பார்க்கப் போனால் 19 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் தேவையாக உள்ளன நாம் இதுவரை காலமும் வழங்கிய வீட்டுத் திட்டங்கள் அனைத்தும் போரால் பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் இந்தியாவில் இருந்து வருகைதந்த ஈழ அகதிகள் முன்னாள் போராளிகள் ஆகியோருக்கு திட்டங்களை புள்ளி அடிப்படையில் வழங்கியுள்ளோம்
மேலும் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் புனரமைக்கப்பட்டு வரும் பாடசாலை கட்டடங்களுக்கான நிதிகள் இனனும் விடுவிகப்படவில்லை இதனால் ஒப்பந்தகாரர்கள் இடைவழியில் வேலைகள் நிறுத்தப்பட்டுல்லது. நிதி கிடைக்காமல் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.எனவே இதற்குரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றார்.
Post a Comment