அனர்த்த நிவாரண நிதியாக வடக்கிற்கு 2 மில்லியன் ஒதுக்கீடு
வட மாகாணத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரணப் பணிகளுக்கான மேலதிகமாக 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் தற்காலிக நிவாரணங்களை வழங்குவதற்கு இந்த நிதி பயன்படவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment