சமஷ்டி தான் வேண்டுமென்ற சம்மந்தர் ஐயாவின் கோசம் தேர்தல் கால வேசம், 2010 முதல் முன்னணி கூறிவருவது நிதர்சனமாகி வருகிறது - சட்ட ஆலோசகர் சுகாஷ் - Yarl Voice சமஷ்டி தான் வேண்டுமென்ற சம்மந்தர் ஐயாவின் கோசம் தேர்தல் கால வேசம், 2010 முதல் முன்னணி கூறிவருவது நிதர்சனமாகி வருகிறது - சட்ட ஆலோசகர் சுகாஷ் - Yarl Voice

சமஷ்டி தான் வேண்டுமென்ற சம்மந்தர் ஐயாவின் கோசம் தேர்தல் கால வேசம், 2010 முதல் முன்னணி கூறிவருவது நிதர்சனமாகி வருகிறது - சட்ட ஆலோசகர் சுகாஷ்


சமஸ்டி தான் வேண்டும் என்று வடக்கிலிருந்து சம்மந்தர் ஐயா விடுத்த முழக்கம் தேர்தல் கால கோசம் என்பதுடன் மக்களை ஏமாற்றும் நாடகம் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுவீஸ் தூதரத்தில் பணயாற்றும் பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இன்றைக்கு சந்தேக நபராக கைது செய்து சிறையில் வைக்கப்பட்டுள்ள இந்த விடயங்களை சர்வதேச சமூகம் உணர்ந்து கொண்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கையில் விசாரணைகள் முன்னெடுக்கலாம் என்ற நிலைப்பாடுகளை மாற்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச தீர்ப்பாயத்திற்கு கொண்டு சென்று நீதியை பெற்றுத் தர வேண்டுமென்றார்.

யுhழ். கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின்; தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சட்ட ஆலோசகர் கே.சுகாஷ் ஊடக சந்திப்பொன்றை இன்று மாலை நடாத்தியிருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது..

தமிழ்த் தேசி மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் இருந்த கூறிய அனைத்தும் நிதர்சனமாகிக் கொண்டு வருகின்றது. 2010 முதல் நாங்கள் வலிறுத்தி வருகின்ற பிரதானமான கோசம் ஈழத்திலே அரங்கேறிய இனப் படுகொலைக்கு முற்று முழுதான சர்வதேச விசாரணை ஒன்று தான் தீர்வைத் தரும் என்பதை நாங்கள் ஆணித்தரமாக வலியுறுத்தி வருவதோடு உள்நாட்டில் நடக்கக் கூடிய எந்தவொரு விசாரணையோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு போதும் தராது என்பதையும் நாங்கள் அணித்தரமாக வலியுறுத்தி வந்தோம். அது இன்று நிதர்சனமாகியிருக்கின்றது.

சுவிஸ் தூதரகத்தீனுடைய பணியாளர் கடத்தப்பட்ட விவகாரத்திலே பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற நபர் இன்று சந்தேக நபராகக்கப்பட்டு விளக்கமறியலிலே வைக்கப்பட்டிருக்கின்றார். சிறையிலே அடைக்கப்பட்டிருக்கின்றார்.

சுவிஸ் நாட்டினுடைய வெளிவிவகார ராஐhங்க திணைக்களத்தினுடைய அறிக்கையிலே இலங்கை அரசை கடுமையாக சாடி சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற நிறுவனங்கள் சரியான முறையிலே தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கின்றது. இதை தான் நாங்கள் அன்று தொட்டு வலியுறுத்தி வருகின்றோம்.

ஆகவே இந்த இடத்தில் சுவிஸ் போன்ற நாடுகளும் ஐரோப்பிய நாடுகள் மேற்கத்தேய நாடுகள் இந்தியா அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகள் தெளிவாக ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேசச் சட்டத்தினுஐடய பாதுகாப்பு மிக்க இராஐதந்திரி என்ற வட்டத்துக்குள்ளெ வரக் கூடிய ஒரு தூதரகப் பணியாளருடைய விடயத்திலேயே இலங்கை அரசு இந்தளவு மிலேச்சத்தனமாக சட்டத்தைக் கையிலே எடுத்துக் கொண்டு செயற்படுகின்ற பொழுது உள்நாட்டு யுத்தம் நடைபெற்று இங்கே பாதிக்கப்பட்ட தரப்பாக இருப்பது தமிழ் மக்கள். குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பாக இருப்பது இலங்கை அரசு.

ஆகவே இந்த இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு விசாரணை எந்தளவு தூரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைத் தரும் என்பதை சர்வதேச நாடுகளும் சுவிஸ் போன்ற நாடுகளும் தெளிவாக உணருவதற்கான வாய்ப்பாக இந்த விடயம் அமைந்திருக்கின்றது. ஆகவே இனியும் எவருமே இலங்கையினுடைய இனப்படுகொலைக்கு உள்ளகப் பொறிமுறையோ அல்லது கலப்புப் பொறிமுறையையோ வலியுறுத்துவதை நிறுத்த வேண்டும்.

சுவிஸ் தூதரக பணியளாரின் விவகாரத்தில் தெளிவாகிய விடயம் நாங்கள் இதுவரை காலமும் வலியுறுத்தி வந்தததைப் போல இலங்கையிலே முன்னெடுக்கப்படுகின்ற அல்லது இலங்கையினுடைய பங்குபற்றுதலோடு முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு விசாரணையும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை தரப்போவது கிடையாது.

ஆகவே நாங்கள் இந்தப் பொறுப்புக் கூறல் பொறிமுறையலே சரியான திசையிலே முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் வெறுமனெ nஐனிவா மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் எங்களுடைய இனப்படுகொலை விடயத்தை முடக்காது அதையும் தாண்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எங்களுடைய விடயத்தைப் பாரப்படுத்த வேண்டும். அல்லது இனப் படுகொலையை விசாரிப்பதற்காக ஒரு விசேட தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்த இரண்டு பொறிமுறையில் ஏதாவது ஒரு பொறிமுறை ஸ்தாபிக்கப்பட்டால் மாத்திரம் தான் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு தீர:வு கிடைக்கும். மீண்டும் சொல்லுகின்றோம் சர்வதேச குற்றவியயில் நீதிமன்றத்திற்கு எங்களுடைய விடயம் பாரப்படுத்தப்பட வேண்டும். அல்லது இந்த விடயத்தை ஆராய்வதற்காக விசெட தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்த இரண்டில் ஒன்று மட்டும் தான் ஈழத் தமிழ் மக்களுடைய பாதிக்கப்பட்ட தரப்பிற்கு ஒரு தீர்வைத் தரும் என்பது எற்கள் ஆணித்தரமான செய்தி .

இந்த தூதரகப் பணியாளர் கடத்த்ப்பட்ட விவகாரம் ஓய்வதற்கிடையில் யாழ் குடாநாட்டைச் சேர்ந்த தமிழ்க் குடிமகன் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டு நேற்றையதினம் விசாரணைக்காக சென்று இன்றைவரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைச் செய்திருக்கின்றார். ஆகவே மீண்டும் கடத்தல்களும் காணாமல் போதல்களும் வெள்ளை வான்களும் வருமா என்ற ஒரு அச்சமான சூழ்நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டி அடுத்ததாக எமது தமிழ் தேசிய பரப்பிற்கு வருவோமாக இருந்தால் தமிழரசுக் கட்சியினுடைய 70 ஆவது மாநாடு நடைபெற்று முடிந்திருக்கின்றன. வழமை போல தமிழரசுக் கட்சியினர் உரிமைக் கோசங்கள் முழங்கியிருக்கின்றார்கள். புரட்சிகள் வெடிக்கும் என்று முழங்கியிரக்கின்றார்கள். ஆனால் உண்மை என்ன என்பதை நாங்கள் தொடர்ச்சியாக மக்களுக்குச் சொல்லி வருகின்றோம்.

சமஷ்டி தான் வேண்டும் என்று சம்மந்தர் ஐயா வடக்கிலிருந்து முழக்கம் எழுப்பியிருக்கின்றார். அதே நேரத்தில் சமஷ்டியை ஒருபோதும் வழங்க மாட்டோம் என்று கோத்தபாய ராஐபக்ச தெற்கில் இருந்து முழக்கமிடுகின்றார். இதை தான் சொல்லுவார்கள் தேர்தல் நாடகமென்று.

ஏனென்றால் இரண்டு தரப்புமே அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஐபக்சவினுடைய பொதுஐனப் பெரமுனவும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒக்ரோபர் குழப்பத்தின் போது 52 நாட்கள் அந்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கிடையே அதாவது ரணிலுக்கும் மகிந்த ராஐபக்சவிற்குமிடையே ஒரு அதிகாரப் போட்டி நடந்தது.

அந்த அதிகாரப் போட்டியின் பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை மகிந்த ராஐபக்ச அவர்கள் சந்தித்த போது பாராளுமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற இடைக்கால வரைபின் அடிப்படையில் ஒரு அரசியல் யாப்பை உருவாக்கி அந்த இடைக்கால வரைபின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை வழங்குவதாக மகிந்த ராஐபக்ச கூற அதை சம்மந்தன் ஐயா ஏற்று அங்கீகரித்தது என்பது நாடறிந்த உலகறிந்த விடயம்.

அந்த இடைக்கால அறிக்கை வரைபிலே இருக்கின்ற விடயங்கள் முழுமையாக ஒற்றையாட்சி என்பது ஊரறிந்த இரகசியம். அது மாத்திரம் அல்லாமல் அந்த இடைக்கால வரைபின் ஊடாக சம்நத்தர் ஐயா அவர்களும் கூட்டமைப்பினரும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்கு இணங்கியிருந்தார்கள். ஆகவே ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்கு இணங்கி விட்டு பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு இணங்கிவிட்டு இன்று தமிழ் மக்களை மிண்டும் ஒரு தடவை ஏமாற்றி வாக்குகளைச் சூறையாடுவதற்காக தமிழரசுக் கட்சியினுடைய மகாநாட்டிலே சமஷ்டி தான் வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார்கள்.

ஆனால் ஏற்கனவே ஒற்றையாட்சி யாப்பிற்கு கோத்தபாய ராஐபக்ச தலைமையிலான பொதுஐன பெரமுனவும் சம்மந்தர் ஐயா தலைமையிலான கூட்டமைப்பும் இணங்கிவிட்டார்கள்.ஆனால் அவற்றையெல்லாம் மூடி மறைத்து தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக சமஷ்டி என்ற கோசம் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் கூட்டமைப்பினுடைய உண்மை முகம் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். இவர்கள் தொடர்ச்சியாக எமது மக்களை ஏமுhற்ற முடியாது. அதே நேரம் நாங்கள் என்ன சொல்லி வருகின்றொம் என்பதும் மக்களுக்குத் தெரியும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாகத் தோற்றம் பெற்ற 2010 ஆம் ஆண்டு முதல் எமது கொள்கையாக ஒரு நாடு இரு தேசம் என்ற சமஷ்டிக் கொள்கையை முன்வைத்த நாங்கள் பயணித்து வருகின்றோம். அன்று எங்களைப் பார்த்து நக்கலடித்தார்கள் அவ்வாறு நக்கலடித்தவர்களே எங்களோடு இணைந்து பல்கலைக்கழக மாணவர்களுடைய பேச்சுவார்த்தை மேசையிலே தேசக் கோட்பாட்டை ஏற்றார்கள். தேசம் என்று நாங்கள் சொல்லிய பொழுது எங்களைப் பார்த்து நகைத்தவர்கள் சிரித்தவர்கள் விமர்சித்தவர்கள் எங்களோடு இணைந்து தேசம் என்ற கோட்பாட்டை ஏற்றார்கள்.

அதனை கூட்டமைப்பின் மூன்று கட்சிகள் மாத்திம் ஏற்கவில்லை. இலங்கையினுடைய ஐனாதிபதியாக இருக்கின்ற கோத்தபாய ராஐபக்ச அவர்கள் ஐப்பானிய வெளிவிவகார அமைச்சரை கொழும்பிலே சந்தித்த பொழுது ஐப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு மிகத் தெளிவாகச் சொல்லிய செய்தி ஒரு நாடு இரு தேசம் என்ற கோட்பாட்டை இனி எந்த நாடுகளும் எம்மீது திணிக்க முற்படக் கூடாது என்று தான். ஆகவே ஒரு நாடு இரு தேசம் என்ற கோட்பாட்டை பார்த்து இன்று பலர் அச்சப்படுகின்றார்கள்.

ஆனால் எங்களுடைய கட்சித் திடமா நம்புகின்றது எங்களுடைய இந்தக் கொள்கையை முன்னெடுத்து எங்கள் மக்களுடைய இனவிடுதலைக்காக ஒரு தீர்வை பெற்றுக் கொடுப்போம.; அதற்கு தமிழ் மக்கள் எங்களுக்கு போதிய ஆதரவைத் தர வேண்டும். அப்படியான ஒரு ஆதரவை எமது மக்கள் எங்களு;க்குத்; தருவார்களாக இருந்தால் நிச்சயமாக எங்களுடைய கொள்கைப் பயணத்தை முன்னெடுத்து தமிழ் தேசியத்தினுடைய விடுதலைக்காக நாங்கள் அயராது உழைப்போம்.

இதே வேளை தமிழ்த் தேசிப் பரப்பில் மாற்றுத் தலைமையொன்று தேவையாக இருக்கின்றது. ஆனால் அந்த மாற்றுத் தலைமை என்பது கொள்கையின் அடிப்படையில் உருவாக வேண்டிய ஒரு தேவைப்பாடு இருக்கின்றதே தவிர வெறும் கட்சிகளை இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய அதே கொள்கைகளைப் பின்பற்றி இன்னொரு மாற்று அணி உருவாகுமாக இருந்தால் அது மாற்று அணியாக இருக்கலாமே தவிர மாற்றுத் தலைமையாக நிச்சயமாக இருக்க முடியாது.

உண்மையில் 2010 முதல் கொள்கையின் அடிப்படையில் கூ;ட்டமைப்பில் இருந்து வெளியேறி அந்தக் கொள்கையை முன்னெடுத்து வருகின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையில் இந்த மாற்றுத் தலைமை உருவாகினால் அதை மக்கள் ஏற்பார்களே தவிர வெறும் பதவிகளுக்காக கட்சிகள் உருவாக்குவதையோ அற்ப பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக கட்சிகளை உருவாக்கி எண்ணிக்கைகாக நான்கு ஐந்து பேர் சேர்ந்து ஒரு அணியயை உருவாக்கிவிட்டு அதை மாற்றுத் தலைமை என்றோ அதை மாற்று அணியென்றோ கூறினால் அதை புத்துசாலித்தனமான தமிழ் மக்கள் ஒருபோதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.
 

0/Post a Comment/Comments

Previous Post Next Post