தளபதி 64 படத்தின் தலைப்பு அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்
பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி சாந்தனு அர்ஜுன் தாஸ் ஆண்ட்ரியா ரம்யா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
விஜய் இதில் கல்லூரி பேராசிரியராகவும் மாணவராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில் படத்திற்கு மாஸ்டர் என்று தலைப்பு வைத்து அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.
Post a Comment