வடக்கில் அதிகரித்து வருகின்ற டெங்கு நோய்த் தாக்கத்தில் 7511 நோயாளர்கள் இணங்கானப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்தில் மட்டும் 6267 பேர் இணங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இந்த டெங்கு நோய்த் தாக்கத்தால் வடக்கில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்து வருகின்ற டெங்கு நோய்த் தாக்கம் தொடர்பில் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வுட மாகாண சுகாதார சேவைகள் பணிமணை அலுவலகத்தில் ஊடகவியிலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..
அண்மைக்காலமாக வடக்கில் டெங்கு நொயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆயினுமு; இந்த நோயின் தாக்கத்திற்குள்ளாகி வட மாகாணத்தில் 7511 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். இதில் யாழ் மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் இணங்காணப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதாவது 6267 பேர் யாழ் மாவட்டத்தில் இணங்காணப்பட்டிருக்கின்றனர். அதே போன்று வவுனியா மாவட்டம் உட்பட் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இந்நோய்த் தாக்கம் இருக்கிறது. குறிப்பாக. யாழ்ப்பாண மாவட்டத்திலே எடுத்துக் கொண்டால் மாநகர பகுதி, நல்லூர,; கோப்பாய் பகுதிகளில் தீவிரமாக உள்ளளது.
அதிலும் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இதுவரைக்கும் 1591 நோயாளர்களும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 673 நோயாளர்களும் நல்லூர் 676 நோயாளர்களும் இணங்கானப்பட்டள்ளனர். அதே போன்று யாழ் மாவட்டத்தின் ஏனைய இடங்களிலும் கணிசமான அளவு நோயளளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளனர்.
இந்த டெங்கு நோயைக் கட்ட்ப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளோம். பல கூட்டங்களை பல இடங்களிலும் நடாத்தியுள்ளளோம். ஆனாலும் இதில் எங்களுக்கு முக்கிய சவாலாக இருப்பது தினமக் கழிவு முகாமைத்துவம். திண்மக் கழிவு முகாமைத்தவதற்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவது மிகக் குறைவாக உள்ளது. இதனால் உள்ளுராட்சி சபைகள் பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக திண்மக் கழீவுகளை தரம்பிரித்து வழங்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஆனால் பொது மக்கள் அவ்வாறு செய்வது மிக குறைவாக இருக்கிறது. ஆகவே திண்மக் கழிவுகளை பொது மக்கள் தரம்பிரித்து வழங்க வேண்டுமென பொது மக்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். திண்மக் கழிவகற்றல் மாவட்டத்தில் குறிப்பாக மாநகரகத்தில பெரிய சவாலாக உள்ளது.
மேலும் காணிகள் வீடுகள் பல நீண்ட காலமாக புராமரிப்பற்ற நிலையில் இருக்கின்றன. இவற்றிலே பற்றைக்காடுகள் பெருகி டெங்கு நுளம்பு பெருகும் நிலை உள்ளது. ஆகவே அந்த உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நுளம்பு உற்பத்தியாகவும் இடங்களை ஒவ்வொரு வீட்டு உரிமையாளர்களும் அதே நேரத்தில் பொது இடங்களிலும் உரியர்வர்கள் சுற்றாடலை சுத்தமாக பேண வேண்டும்.
இதேவேளை மாநகர சபையில் பெரிய அச்சுறுது;தல் உள்ளது. ஆனாலும் ஆளணியும் எங்களுக்கு சவாலாக உள்ளது. அதனால் வடக்கில் ஏனைய மாவட்டங்களில் இருக்கின்றவர்களை இங்கு சேவையில் ஈடுபடடுத்துவுள்ளோம். ஆகவே பொது மக்கள் பொது அமைப்புக்கள் என அனைவரும் இந்த நோயைக் கட்டப்படுத்தவதற்கு முழுமையான ஒத்துழைப்ப வழங்க வேண்டும்.
குறிப்பாக இந்த நோய்த் தாக்கத்தால் வுட மாகாணத்தில் வடக்கில் 4 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 3 இறப்புக்கள் யாழிலும் மன்னாரிலும் 1 இறப்பு என இறப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் இறப்புக்கள் ஏற்பட்டதை எடுத்தப் பார்த்தால் நோய்த் தாக்கத்திற்குள்ளானவர்கள் இறுதிநேரத்தில் வைத்தியசாலை வந்தனதாலே தான் ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே தாக்கம் ஏதும் அல்லது அறிகுறி இருந்தால் உடன் வைத்தியசாலையை நாட வேண்டும். அவ்வாறு சந்தேகதித்தால் உடனடியாக வைத்தியாசாலையை அனுகி உரிய சிகிச்சையைப் பொற்றுக் கொள்ள வேண்டும். வேண்டும் என்றார்.
Post a Comment