சுவிஸ் தூதரக பெண் கடத்தப்பட்ட விவகாரம் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டு - Yarl Voice சுவிஸ் தூதரக பெண் கடத்தப்பட்ட விவகாரம் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டு - Yarl Voice

சுவிஸ் தூதரக பெண் கடத்தப்பட்ட விவகாரம் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டு


சுவிஸ் நாட்டு தூதரகத்தில் வேலை செய்த நபர் கடத்தப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மையை அரசாங்காங்கம் வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் மத்தியில் அவ நம்பிக்கையை ஏற்படுத்துமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள தனது இல்லத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

இலங்கையில் கொழும்பில் இருக்கக் கூடிய சுவிஸ் தூதரகத்தில் வீசாப் பிரிவில் வேலை செய்கின்ற பெண் கடத்தப்பட்டிருக்கின்றார். அவர் இலங்கையைச் சார்ந்தவர். அங்கு ஒரு அதிகாரியாக அவர் வேலை செய்திருக்கின்றார். அவர் கடத்தப்பட்டு அவரிடம் பல தகவல்களைப் பெறுவதற்கு கடத்தியவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள் என்றதாக ஊடக செய்திகள் இருக்கின்றது.

இதற்கு மேலாக சுவிஸ் நாட்டு வெளிவிவகார அமைச்சு அங்குள்ள இலங்கை தூதுவரரை அழைத்து கேள்விகளைக் கேட்டுள்ளது. அதே போல இலங்கையிலுள்ள சுவீஸ் தூதுவர் இலங்கைப் பிரதமர் மற்றும் வெளிவிவவகார அமைச்சை உடனடியாக சந்தித்து தங்களுடைய கண்டனங்களை வெளியிட்டுள்ளதுடன் உடனடியாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று கூறியிருக்கிறது.

இப்பொழுது இருக்கக் கூடிய ஐனாதிபதி முன்னர் பாதுகாப்பு செயலாளராக இருந்த பொழுது அவர் தொடர்பில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் இருந்தன. கடந்த தேர்தல் காலத்தின் போதும் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்தது. வெள்ளைவான் கடத்தல்கள், காணாமல் போனவர்கள் உட்பட பல்வேறுபட்டவர்கள் கொல்லப்படுவதற:கு காரணமாக இருந்தார்கள் என பல பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

இப்பொழுது புதிய ஐனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட சில நாட்களுக்குள் இவ்வாறன விசயம் நடந்துள்ளமை நிச்சயமாக சர்வதேச சமூகத்தின் மத்தியில்; அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதுடன் இவர்கள் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றார்களாக என்ற கேள்வியையும் எழுப்பும்.

இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் இராஐதந்திர மட்டத்தில் வேலை செய்யக் கூடியவர்கள் கடத்தப்படுவதென்பது நிச்சயமாக அதனை சர்வதேச சமூகம் சரியான கோணத்தில் பார்க்க மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இதனை யார் செய்தார்கள் ஏன் செய்தார்கள் போன்ற விடயங்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு உண்மை நிலைகள் சர்வதேச சமூகத்தின் முன் வர வேண்டும்.

இதனுர்டாக் தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்பதை அரசாங்கம நிருபிப்பதன் ஊடாகத் தான் இதனைச் சரி செய்ய முடியும். ஆகவே எவ்வளவு விரைவாக அரசாங்கம் இதில் செயற்படுகின்றதென்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் பிரதம மந்திரி வெளிவிவகார அமைச்சர்கள் போன்றவர்கள் தாங்கள் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த விசாரணைகள் உண்மையாக நேர்மையாக நடைபெற்று இதனுடைய சூத்திரதாரிகள் கண்டு பிடிக்கப்பட்டால் நிச்சயமாக மாற்றங்கள் வரலாம். இல்லை என்று சொல்லிச் சொன்னால் ஆரம்பமே அவநம்பிக்கைகளாகப் போகுமாக இருந்தால் அது இலங்கை நாட்டிற்கு ஏற்புடையதாக இருக்காது என்பது தான் எங்களுடைய கருத்து என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post