தமிழ் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்க முயற்சிக்கும் எந்தவொரு தரப்பிற்கும் துணை போவதற்கு நாங்கள் தயாராக இல்லை - த.தே.ம.மு.செயலாளர் கஜேந்திரன் - Yarl Voice தமிழ் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்க முயற்சிக்கும் எந்தவொரு தரப்பிற்கும் துணை போவதற்கு நாங்கள் தயாராக இல்லை - த.தே.ம.மு.செயலாளர் கஜேந்திரன் - Yarl Voice

தமிழ் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்க முயற்சிக்கும் எந்தவொரு தரப்பிற்கும் துணை போவதற்கு நாங்கள் தயாராக இல்லை - த.தே.ம.மு.செயலாளர் கஜேந்திரன்



தமிழினத்தை அழிக்கும் வகையில் தமிழ் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காகச் செயற்படுகின்ற எந்தவொரு தரப்பின் முயற்சிகளுக்கும் துணை போக நாங்கள் தயாராக இல்லை. ஆகையினால் அந்தச் செயற்பாட்டை முன்னெடுக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணையப் போவதில்லை. அவர்களின் அந்தக் கோரிக்கைகளையும் நிராகரிக்கின்றோம்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமுன்ற உறுப்பினருமான செல்வராசா கNஐந்திரன் தமிழ்த் தரப்புக்களின் ஒற்றுமைக்காக கூட்டமைப்பு விடுத்த அழைப்பு தொடர்பில் பதிலளித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

தமிழினத்தை அழிப்பதற்காக தமிழினத்தை விலை பேசி விற்பதற்காக தமிழினம் 70 ஆண்டுகாலமாக வலியுறுத்தி வருகிற தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை சமஷ்டி என்கின்ற விடயங்களை கைவிட்டு தமிழர்களுடைய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்காக செயற்படுகிற எந்தவொரு தரப்பின் முயற்சிக்கும் துணை போக நாங்கள் தயாராக இல்லை.

கூட்டமைப்பு தமிழ் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு கோட்டபாய ராஐபக்சவோடு சேர்ந்து இந்த ஒற்றையாட்சி அடிப்படையிலான இடைக்கால அறிக்கை கொண்டு வந்த நிறைவேற்றுவதற்கு அவர்கள் தயாராகி விட்டார்க்ள. ஆனால் இப்பொழுது தேர்தல் காலம் என்பதால் அவரோடு முரண்படுகின்ற பாசாங்கு காட்டப்படுகிறதே தவிர ஒரு பொழதும் அவர்கள் ஒற்றையாட்சியை விட்டு வரப்போவதில்லை.

குறிப்பாக தன்னுடைய கட்சியின் மாநாட்டின் சம்மந்தன் ஐயா தெளிவாக ஒரு விடயத்தை சொல்லியிருக்கின்றார்  அதாவது பொரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற தலைவரோடு தாங்கள் பகைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று சொல்லியிருக்கின்றார். அதனுடைய பொருள் தாங்கள் ஒரு பொதுழுதும் இந்த ஐனாதிபதி மீது சுமத்தப்பட்டிருக்கிற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையை வலியுறுத்தப் போவதில்லை என்பதைத் தான் அவர் மறைமுகமாகச் சுட்டிக் காட்டகின்றார்.

இரண்டாவது விடயம் கோட்டபாய hஐபக்ச சொல்லியிருப்பது பெரும்பான்மை மக்கள் விரும்பாத எந்தவொன்றையும் தான் செய்யப் போவதில்லை என்று. அப்படி என்று சொன்னால் இவர்கள் தமிழ் மக்கள் நீண்டகாலமாகக் கோருகின்ற தமிழ்த் தேசம் இறைமை என்கின்ற விடயங்களைக் கைவிட்டு விட்டார்கள். அதனை இனி ஒருபோதும் வலிறுத்தப் போவதில்லை என்பதை அவர்கள் மீளவும் சொல்லி தாங்கள் ஏற்கனவே எல்லாரோடும் சேர்ந்து இணங்கியிருக்கிற பாராளுமன்ற அந்த இடைக்கால அறிக்கையை ஒற்றையாட்சி நிறைவேற்றப் போகின்றோம் என்று தான் சொல்லியிருக்கின்றார்.

ஆகவே தமிழ் அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குகிற வேலையில் ஈடுபடுகிற அல்லது சினாவில் இருந்த விடுபட்டு இந்திய மேற்கு வட்டத்திற்குள் இவர்களைக் கொண்டு வருரவதற்காக தமிழ்த் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை என்கின்ற தமிழர் நலன்களை பலியிட்டு ஒற்றையாடசிக்குள் தமிழ் அரசியலை முடக்கி அதனை ஈடாக வைத்து இந்திய மேற்கு நாடுகளுடைய நலன்களைப் பேனுகின்ற இவர்களுடைய முயற்சிக்கு; எங்கள் மக்களை பலியாக்குவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

மாறாக இந்தியா மேற்கு நாடுகளுடைய நலன்களைப் பேனுவதற்கு நாங்கள் ஒத்துழைப்பதற்கு தயாராக இருக்கிறோம். குறிப்பாக இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்பு நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் உயிர்ப்போடு இருக்க வேண்டும்.  இது உயிர்ப்போடு இருக்க வேண்டுமென்ற அடிப்படையில்; இலங்கை இந்திய ஒப்பந்தத்திலே தீர:வு கொடுக்க வேண்டுமென்று தான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர 13 ஆம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்று ஒரு பொழுதும் சொல்லவில்லை.

ஆகவே அந்த 13 ஆவது திருத்தத்தை மறந்து தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கிற வகையில் தனது செயற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும். அது தேசம் அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும். அதனூடாக இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு தீர்வாக வரும். இலங்கை இந்திய ஒப்பந்தம் பாதுகாக்கப்படும். நாங்கள் எப்பொழுதுமே இலங்கை இந்தியா நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒத்;துழைக்கிற சேதமாக எங்களுடைய தேசம் இருந்து கொண்டே இருக்கும்.

ஆகவே இதைக் கைவிட்டு இதற்கு எதிராக ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவதற்கு அதடினடிப்படையிலான புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு ஈடுபடுகின்ற தரப்புகளோடு நாங்கள் ஒரு பொழுதும் துணை நின்று இந்த இனத்திற்கு துரோகம் இழைக்க தயாராக இல்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post