கிழக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - வடக்கிற்கு நியமிப்பதில் தொடரும் இழுபறி
வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (04) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
வட மத்திய மாகாண ஆளுநராக திஸ்ஸ விதாரணவும் கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாகஇ ஆறு புதிய ஆளுநர்கள் ஆறு பேர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் கடந்த மாதம் (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருந்தனர்.
ஆளுநர்களின் முழுமையான விவரங்கள்
திஸ்ஸ விதாரண– வட மத்திய மாகாண ஆளுநர்
அனுராதா யஹம்பத் –கிழக்கு மாகாணம்
ராஜா கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநர்
சீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநர்
ஏ.ஜே.எம்.முஸம்மில் – வடமேல் மாகாண ஆளுநர்
லலித் யு.கமகே – மத்திய மாகாண ஆளுநர்
வில்லி கமகே – தென் மாகாண ஆளுநர்
டிகிரி கொப்பேகடுவ – சபரகமுவ மாகாண ஆளுநர்
Post a Comment