இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் பிரசித்தி பெற்ற விரதமான விநாயக சஷ்டி விரதமாகும்.
இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சதுர்த்ததி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும்.
இவ் விரதத்தின் 20ஆம் நாள் நிகழ்வே கஜமுக சங்காரம் ஆகும் .
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பஞ்சமுகவிநாயக பெருமான் பூத வாகனத்தில் வெளிவீதி எழுந்தருளி கஜமுகனுடன் போராடி கஜமுகனை சம்காரம் செய்தார்.
பாரம்பரிய முறைப்படி மயிலாட்டம்இகுதிரையாட்டம்இபாம்பாட்டம் உள்ளிட்டவையும் இடம்பெற்றது.
பெருமளவிலான விநாயக அடியார்கள் கலந்துகொண்டு கஜமுகசங்கார நிகழ்வினை கண்டுகளித்தனர்.
Post a Comment