இழுவைமடி தடைசட்டமூலத்தை கொண்டுவர முயற்சி செய்த சுமந்திரனே அந்த சட்டமூலம் நடைமுறைக்குவராமல் போனமைக்கும் காரணம் என குற்றச்சாட்டு - Yarl Voice இழுவைமடி தடைசட்டமூலத்தை கொண்டுவர முயற்சி செய்த சுமந்திரனே அந்த சட்டமூலம் நடைமுறைக்குவராமல் போனமைக்கும் காரணம் என குற்றச்சாட்டு - Yarl Voice

இழுவைமடி தடைசட்டமூலத்தை கொண்டுவர முயற்சி செய்த சுமந்திரனே அந்த சட்டமூலம் நடைமுறைக்குவராமல் போனமைக்கும் காரணம் என குற்றச்சாட்டு


இலங்கையில் இழுவைமடி தடைசட்டமூலத்தை கொண்டுவர முயற்சிசெய்த தமிழ்தேசியக் கூட்ட்டமைப்பின் பாராளுமனற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனே அந்த சட்டமூலம் நடைமுறைக்குவராமல் போனமைக்கும் காரணம் அவரே அந்த சட்டமூலத்தை நடைமுறைபடுத்த வேண்டாம் என அரசுக்கு கூறியுள்ளதாக வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் குற்றம்சாட்டினார்.

அவர்இதுதொடர்பாகஊடகங்களுக்குகருத்துதெரிவிக்கையில்

இலங்கையில் இழுவைமடித்  தடைசட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் அந்த முறைமை இல்லாது ஒழிக்கப்பட்டு கடல்வளம் பாதுகாக்கப்பட வேண்டும் என கோரி  வந்தோம்.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமனற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அந்த சட்டமூலத்தை கொண்டுவர பெரும் பங்காற்றிருந்தார்.

எனினும் அது நடைமுறைக்கு வரவில்லை. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலேயே அதிக ரோலர் படகுகள் உள்ளன.

கடந்த உள்ளுராட்ச்சி தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகரசபையில் போட்டியிட்ட முன்னாள்  மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்டை வெற்றி பெறவைக்கவும் அவருக்கு குருநகர்மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுக்கவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உதவி செயிட்டுள்ளார்.

அப்போது இருந்த கடற்தொழில் அமைச்சர் ஊடாக சட்ட்மூலத்தை இப்போதைக்கு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டாம் என தம்மிடம் உரியதாக அந்த அமைச்சர் என்னிடம் கூறினார். அப்படியினால் பாராளுமன்ற உறுப்பினர் எம்மை ஏமாற்றியுள்ளார்.

குறிப்பாக வடக்கு  மாகாணத்தை பொறுத்தவரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினால் எமது கடல் வளம் மிகமோசமாக பாதிப்படைந்து வருகின்றது. இதனால் எமது பகுதிகளில் உள்ள மீன் இனங்கள் வேகமாக அழிவடைந்து வருகின்றன

வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களை பொறுத்தவரையில் சட்டவிரோதமான முறைமைகளை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுபவர்களினால் பாதிப்படைகின்றோம். 

அதிலும் பார்க்க தென்னிலங்கை மீனவர்கள் எமது கடல் பகுதியில் மீன்பிடியில் நவீன உபகரணங்களுடன் தொழிலில் ஈடுபடுவதால் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றோம்.  வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு மாவடடத்தில் தென்னிலங்கை மீனவர்களின்  அத்துமீறல்கள் மிகவும் அதிகமாக உள்ளது என்ரார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post