வரலாற்றுத் தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட சம்பிக்க ரணவக்க - Yarl Voice வரலாற்றுத் தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட சம்பிக்க ரணவக்க - Yarl Voice

வரலாற்றுத் தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட சம்பிக்க ரணவக்க


2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் செய்த வரலாற்றுத் தவறுகளுக்காக தற்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றால் நேற்று பிணை வழங்கப்பட்டதை அடுத்து அவர் இன்று (புதன்கிழமை) கண்டியில் மல்வத்து மகாநாயக்கத் தேரர்களை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

'நாம் கடந்த காலங்களில் வரலாற்றுத் தவறுகளை இழைத்து விட்டோம். இதற்காக நாம் இவ்வேளையில் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிப் பெற்றிருந்தது. எமது ஜாதிக ஹெல உறுமயவின் 9 உறுப்பினர்களால்தான் அந்த அரசாங்கத்துக்கு அன்று பெரும்பான்மை கிடைத்திருந்தது.

அப்போதுஇ லக்ஷ்மன் கதிர்காமரைத்தான் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான கூட்டணிக் கட்சிகள் கேட்டுக் கொண்டிருந்தன.

ஆனால்இ மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டும் என்று நாம் குரல் கொடுத்திருந்தோம். அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் நாம் இதனை வலியுறுத்தியிருந்தோம். இதற்காக நாம் இன்று நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோல் 2005 ஜனாதிபதித் தேர்தலின்போதும் நாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம். அப்போது ஜே.வி.பியும் மஹிந்தவுக்கு ஆதரவினை வழங்கியிருந்தது.

அன்றுஇ சில தேரர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்பட்டபோதுஇ நாம் தேசிய மாநாடு ஒன்றை நடத்திஇ மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கினோம்.

எமது இந்த செயற்பாடுகளின் பலனாகத்தான் 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இதற்காகவும் நாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இவைதான் நாம் அரசியல் ரீதியாக செய்த தவறுகளாகும். எமது இந்த தவறால்இ ஒட்டுமொத்த நாடே ஒரு குடும்பந்தன் சொத்தாக மாற்றமடைந்துள்ளது' என மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post