டெஸ்ட் தரவரிசையில் கோலி தொடர்ந்தும் முதலிடம்
2019 ஆம் ஆண்டின் இறுதியில் டெஸ்ட் கிரிக்கட் போட்டி துடுப்பாட்ட தரவரிசை பட்டியலில் இந்திய அணி தலைவர் விராட் கோலி 928 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ள புதிய தரவரிசை பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் சுமித் 911 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணி தலைவர் கேன் வில்லியம்சன் மாற்றமின்றி 3ஆம் இடத்தினை பிடித்துள்ளார்.
அதேநேரம் இந்த தரவரிசை பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த இந்திய அணி வீரர் புஜாரா 5 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை டெஸ்ட் கிரிக்கட்டின் பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் வேகபந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 902 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளார்.
அதனுடன் நியூசிலாந்து அணியின் வீரர் நீல் வோக்னர் இந்த தரவரிசை பட்டியலில் 859 புள்ளிகளுடன் தரவரிசையில் 2 ஆம் இடத்தில் இடம்பிடித்துள்ளார்.
அதேநேரம் இந்த பட்டியிலில் 832 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணியின் வீரர் ககிசோ ரபாடா 3 ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment