கூட்டமைப்பின் தவறுகள் திருத்தப்பட்டு வெளியேறியவர்கள் மீள அழைக்கப்பட வேண்டும் - சம்மந்தனிடம் சித்தார்த்தன் வலியுறுத்து - Yarl Voice கூட்டமைப்பின் தவறுகள் திருத்தப்பட்டு வெளியேறியவர்கள் மீள அழைக்கப்பட வேண்டும் - சம்மந்தனிடம் சித்தார்த்தன் வலியுறுத்து - Yarl Voice

கூட்டமைப்பின் தவறுகள் திருத்தப்பட்டு வெளியேறியவர்கள் மீள அழைக்கப்பட வேண்டும் - சம்மந்தனிடம் சித்தார்த்தன் வலியுறுத்து


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலரும் வெளியேறிச் சென்றிருக்கின்ற நிலையில் தமிழ்க்  மக்களின் ஒற்றுமையின் அவசியம் கருதி அவர்கள் அனைவரையும் கூட்டமைப்பில் வந்து இணையுமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தனே அழைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டியது அவசியமென்றும் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஆகையினால் கூட்டமைப்பின் தவறுகள் திருத்தப்பட்டு வெளியேறியவர்கள் நம்பக்கூடிய நிலைமைகள் ஏற்படுத்தப்படுவதுடன் ஒற்றுமைக்காக இதயசுத்தியுடன் செயற்பட வேண்டியது அவசியம அதுனூடாக ஒற்றுமை ஏற்பட வேண்டும் இல்லையேல் அது தமிழ் மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்; என்றார்.

தமிழ்க் கட்சிகளிற்குள் ஏற்பட்டு பிரிவையடுத்து வலியுறுத்தப்படுகின்ற ஒற்றுமைய குறித்து கருத்து வெளிPயிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..
தமிழர் தரப்பிலுள்ள ஏனைய தமிழ்த் தேசிய் கட்சிகளை கூட்டமைப்புடன் வந்த சேரும் படி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் அழைப்பை விடுத்திருந்தார். ஆனால் நாங்கள் கூட்டமைப்பு இதய சுத்தியோடு செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் நடந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் அதற்கேற்ற வகையிலே அவர்களை அதாவது வெளியிலே இருக்கக் கூடிய கட்சிகளை நம்பவைத்து அவர்கள் நம்பக் கூடிய விதமாக நாங்கள் நடந்து கொண்டு அழைத்தால் தான் அவர்கள் வருவார்கள். அதைவிடுத்து வெறுமனே ஒற்றுமைக்கு வாங்கள் என்று சொன்னால் வரமாட்டார்கள் தானே.

ஆகவே இந்த விடயத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தர் அண்ணை சரியான கவனத்தை செலுத்தி அப்படியாக அனைவரையும் அழைக்க முயற்சிக்க வேண்டும். இது சம்மந்தமாக சில தினங்களின் முன்னர் இடம்பெற்ற கூட்டமைப்பினுடைய மூன்று கட்சிகளினதும் கூட்டத்தில் கூட கதைக்கப்பட்டுள்ளது. ஆகையினால்; அனைவரையும் ஓரணியில் இணைப்பது சம்மந்தமான முயற்சிகளை கட்டாயம் எடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

ஆக முயற்சி என்று சொன்னால் நான் கூறியபடி உண்மையாகவே ஒற்றுமைக்கான முயற்சியாக இருக்க வேண்டும். சகல தரப்புக்களும் விட்டுக் கொடுத்து தமிழ் மக்களுடைய நன்மை ஒன்றையே முன்னிறுத்தி ஒற்றுமையைக் கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆனால் அது எவ்வளவு சாத்தியமாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

ஆககையினால்; நடைபெறவிருக்கும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாக தேர்தலில் ;போட்டியிட்டால் நிச்சயமாக தாக்கம் இருக்கும்;. தனித்தனியாகப் போட்டியிட்டு மிகச் சொற்ப சொற்ப ஆசனங்களுடன் எல்லாரும் வருவார்களாக இருந்தால் இந்த தமிழ்க் கட்சிகளை கையாள்வது சிங்கள தலைமைகளுக்கு மிக இலகுவாக இருக்கும்.

ஆக இதில் கையாள்வது என்று நான் சொல்வதானது தமிழ் மக்களுடைய தீர்விற்கான நடவடிக்கைகளைத் தட்டிக் கழித்துக் கொண்டு பின் செல்வதற்கு மிக வசதியாக இருக்கும். அத்தோடு எங்களுக்குள்ளே இருக்கக் கூடிய முரண்பாடுகளை அவர்கள் பாவிப்பார்கள். எங்களுக்குள்ளே இருக்கின்ற அந்த முரண்பாடுகளும் ஒரு தீர்வை நோக்கிப் போவதற்குத் தடுக்கும். இப்படியான பல சங்கடங்கள் உருவாகுமென்று நினைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post