ஊடகவியலாளர்களுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்பில் உடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - சுதந்திர ஊடக இயக்கம் - Yarl Voice ஊடகவியலாளர்களுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்பில் உடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - சுதந்திர ஊடக இயக்கம் - Yarl Voice

ஊடகவியலாளர்களுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்பில் உடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - சுதந்திர ஊடக இயக்கம்


ஊடகவியலாளர்களுக்கெதிரான தாக்குதல்கள் தொடர்பில் உடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்- சுதந்திர ஊடக இயக்கம்

கடந்த சில தினங்களுக்குள் ஊடகவியலாளர்கள் தமது தொழில் காரணமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவதை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அளுத்கமை பிரதேச ஊடகவியலாளர் துசித குமார டி சில்வா மற்றும் அவரது மனைவியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இந்த சம்பவங்களின் தொடரில் புதிதாக இணைந்துள்ளதாக எமக்கு அறியக்கிடைக்கின்றது. '

அளுத்கமை பிரதேசத்தில் செயற்கை மதுபான உற்பத்தி மேற்கொள்ளும் சில இடங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்
சோதனையிட்டு ரூபவ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக அளுத்கமை பொலிஸாரிடம்
ஒப்படைத்துள்ளனர்.

இந்த செய்தியை தாம் பணியாற்றும் ஊடகத்தில் அறிக்கையிட்டதோடு ரூபவ் அந்த செய்தியின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்ட குழுவொன்றின் மூலமே தானும் மனைவியும் தாக்கப்பட்டதாக' ஊடகவியலாளர் துசித குமார எமக்குத் தெரிவித்தார்.

'தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் குறித்த அறிக்கையிடலுக்கு பதில் வழங்குவதாக தாக்குதல் நடத்தியவர்கள் இதற்கு முன்னரும் அச்சுறுத்தல் மேற்கொண்டிருந்ததாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் துசித குமார தெரிவித்தார்.

அவரது கூற்றிற்கேற்ப இந்த தாக்குதல் சம்பவத்தில் அவ்வாறான அரசியல் பழிவாங்கலொன்று இருப்பின்ரூபவ் அது ஜனநாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகவே சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது.

தொழில்சார் ஊடகவியலாளர் ஒருவரை இழிவாக நடத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது.

இந்த சம்பவத்தை சாதாரணமாகக் கருதாமல் ரூபவ் நீதியான முறையில் விசாரணைகளை நடத்திரூபவ் சந்தேகநபர்களை நீதியின் முன் நிறுத்தும்படி உரிய அதிகாரிகளிடம் சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக் கொள்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post