அமைச்சரவையின் அதிரடித் தீர்மானம்
அனைத்து பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் சகல வசதிகளைக் கொண்ட மூன்று பாடசாலைகளை அபிவிருத்தி செய்து அந்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மேம்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன்மூலம் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போன்று அனைத்து மாவட்டங்களுக்கும் மும்மொழிகளும் கற்பிக்கப்படுவதை உறுதி செய்யும் அனைத்து வசதிகளையும் கொண்ட தேசிய பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் இவ்வாறான இருபது பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை உயர்தர பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழக அனுமதியைத் தீர்மானிக்கின்ற செட் புள்ளி வழங்கல் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
தற்பொழுது பயன்படுத்தப்படும் மாவட்ட அடிப்படைக்கு பதிலாக பாடசாலையை அடிப்படையாக கொண்ட புதிய நடைமுறை ஒன்றை அமுலாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களுக்காக சமமான நீதியான கல்விக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment