அஜித்திற்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு விஜய் கூறிய பதில்
அஜித்-விஜய் தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரங்கள். ரஜினியை அடுத்து பெரிதாக இவர்களது படங்கள் தான் அதிகம் கொண்டாடப்படும்.
அதிலும் பாக்ஸ் ஆபிஸில் படத்துக்கு படம் இவர்களது படம் உலகளவில் பேசப்படும்.
ஒரு காலத்தில் தொகுப்பாளர்களில் கலக்கியவர் ஆனந்த கண்ணன். இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் விஜய் மற்றும் அசினை பேட்டி எடுத்தது பற்றி பேசியிருந்தார்.
அப்போது விஜய்யிடம் உங்களுக்கும் அஜித்துக்கும் எப்போதும் ஆகாதா என்று கேட்டேன். அதற்கு விஜய் அவர்கள் மிகவும் கூலாக எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
Post a Comment