முன்னாள் அமைச்சர் சம்பிக்க கைது - நேரில் சென்று பார்வையிட்ட சஜித் பிரேமதாச
கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சற்றுமுன் அங்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் சம்பிக்கவை சந்தித்தனர்.
2016ம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்தே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது கொழும்பு நீதவான் முன்னிலையில் சம்பிக்க ரணவக்க ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment