ஸ்ரீரீலங்கா கிரிக்கெட்சபை கடுமையாக சாடியுள்ள மகேல ஜயவர்தன - Yarl Voice ஸ்ரீரீலங்கா கிரிக்கெட்சபை கடுமையாக சாடியுள்ள மகேல ஜயவர்தன - Yarl Voice

ஸ்ரீரீலங்கா கிரிக்கெட்சபை கடுமையாக சாடியுள்ள மகேல ஜயவர்தன


ஸ்ரீரீலங்கா கிரிக்கெட் வீரர்களின் உயிர்களுடன் விளையாடுகின்றதாக என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நடவடிக்கைகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூர் ஒருநாள் போட்டி தொடருக்கான கால அட்டவணை குறித்து அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

நாளைய தினம் ஆரம்பமாகும் போட்டித்தொடர் இந்த மாதம் 31ஆம் திகதி வரையில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

இவ்வாறு போட்டிகளை நடத்துவதன் மூலம் வீரர்களின் தரத்தை உயர்த்த முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாறாக இவ்வாறு இடையறாது போட்டிகளை நடத்தினால் இறுதியில் வீரர்கள் உயிருடன் இருப்பார்களா என்ற சந்தேகம் எழுகின்றது எனவும் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post