ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் இந்தியா மாற்றம் செய்ய வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - Yarl Voice ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் இந்தியா மாற்றம் செய்ய வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - Yarl Voice

ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் இந்தியா மாற்றம் செய்ய வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


ஈழ தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்திலேயே இந்தியாவின் பாதுகாப்பு தங்கியுள்ளதால் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா மாற்றம் செய்ய வேண்டும் அதே நேரத்தில் தென்னிலங்கை அரசியல்; போட்டியில் தமிழ் மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஐபக்ச 13 இலட்சம் வாக்குகள் இடைவெளியால் சிங்கள பௌத்த வாக்குகளைப் பெற்று வென்றிருப்பதானது தமிழ் மக்களை நரகத்திற்கு அனுப்பலாமென்ற அச்சமானதொரு சூழ்நிலை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

19ஆவது திருத்தச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்று கூறுகின்றனர். அவ்வாறு கூறுவார்கள் என்றால் பெயருக்காகவாவது இருந்த ஐனநாயக பாதுகாப்பு அனுகுமுறைகளை முற்று முழுதாக அகற்றி தங்களுடைய நகழ்ச்சி நிரலi எந்தவிதமாக தடைகளும் இல்லாமல் நிறைவேற்றுவதற்கான முயற்சியாகத் தான் நாங்கள் அதனைப் பார்க்கிறொம்.

ஏங்களைப் பொறுத்தவரையில் 19 ஆவது திருத்தம் என்பது உண்மையில் கண்துடைப்பு. அது நடைமுறையில் இருந்தும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியவில்லை. ஆக பெயருக்காக இருந்தாலும் அதனால் எதுவித பலனும் இல்லை.

தென்னிலங்கையில் இருக்கக் கூடிய அரசியல் போட்டியில் சிக்குப்படாமல் தமிழ் மக்கள் தங்களின் நலன்கள் எது என்ற அடிப்படையில் சிந்தித்துச் செயற்பட வேண்டும். அதனுர்டாகவே எமது இலக்கை அடைந்து கொள்ள கூடியதாக இருக்கும். இல்லையேல் அது எமக்கெ பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆதனை விட்டுவிட்டு எங்களுக்கு என்ன தேவை என்ற கோணத்தில் சிந்தித்து நாங்கள் எங்களுடைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இன்றைய நலையில் கோத்தபாய 13 இலட்சம் வாக்குகள் இடைவெளியால் வென்றிரப்பது தமிழ் மக்களை நரகத்திற்கு அனுப்புவதாகத் தான் பயத்தில் தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்றார்.

இதேவேளை இந்தியாவிற்கு இலங்கை ஐனாதிபதி மேற்கொண்ட விஐயம் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறை செலுத்தியிருக்கிறது. இன்றைய புகோள அரசியல் நிலைமைகளில் ஈழதேசத்தின் நலனிலேயே குறிப்பாக ஈழ தேசத்தை அங்கரிப்பதிலேயே இந்தியாவின் பாதுகாப்பு தங்கியுள்ளது.

ஆகையனால் இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் செய்து கொண்டு ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைகளை அனுக வேண்டும். அதற்கமைய ஈழத்திலு;ள மக்களுடன் இணைந்து ஈழ மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வொன்றை ஏற்படுத்துவதனூடாக இந்தியா தனது பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post