நித்தியானந்தாவிற்கு அடைக்கலம் கொடுக்கவில்லை - ஈக்குவடோர் அரசாங்கம் அறிவிப்பு - Yarl Voice நித்தியானந்தாவிற்கு அடைக்கலம் கொடுக்கவில்லை - ஈக்குவடோர் அரசாங்கம் அறிவிப்பு - Yarl Voice

நித்தியானந்தாவிற்கு அடைக்கலம் கொடுக்கவில்லை - ஈக்குவடோர் அரசாங்கம் அறிவிப்பு


சாமியார் நித்தியானந்தாவுக்கு தங்களது நாடு அடைக்கலம் கொடுக்கவில்லை எனவும் அவரின் அகதி கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகவும் ஈக்குவடோர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு வழக்குகளில் சிக்கிய நித்தியானந்தா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார். நேபாளம் வழியாக போலி கடவுச் சீட்டு மூலம் வெளிநாட்டுக்கு நித்தியானந்தா தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தென் அமெரிக்கா கடற்பரப்பில் உள்ள ஒரு தீவை வாங்கி அங்கே தனிநாடு அமைக்கப் போவதாக பிரகடனம் செய்து தேசதுரோக வழக்கையும் எதிர்கொள்ள இருக்கிறார் நித்தியானந்தா.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம் நேற்று நித்தியானந்தா குறித்து ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது 'ஈக்குவடோர் நாட்டிடம் நித்தியானந்தா சர்வதேச அளவிலான தனிநபர் பாதுகாப்புக்கான அதாவது அகதியாக அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது வேண்டுகோளை ஈகுவடார் அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

இதனையடுத்து ஹைதிக்கு அவர் சென்றிருக்கலாம். பசிபிக் பெருங்கடலில் நித்தியானந்தா தீவுகளை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எந்த வகையிலும் ஈக்குவடோர் அரசாங்கம் உதவி செய்யவில்லை.

நித்தியானந்தாவின் விவகாரத்தில் ஈக்குவடோர் நாட்டின் பெயரை ஊடகங்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post