அமைச்சு பதவிகளை நாங்கள் கோரவில்லை, தீர்வு கிடைக்கும் வரையில் அமைச்சுப் பதவிகளைப் பெறமாட்டோம் - சுமந்திரன் - Yarl Voice அமைச்சு பதவிகளை நாங்கள் கோரவில்லை, தீர்வு கிடைக்கும் வரையில் அமைச்சுப் பதவிகளைப் பெறமாட்டோம் - சுமந்திரன் - Yarl Voice

அமைச்சு பதவிகளை நாங்கள் கோரவில்லை, தீர்வு கிடைக்கும் வரையில் அமைச்சுப் பதவிகளைப் பெறமாட்டோம் - சுமந்திரன்


இனப்பிரச்சனைக்கான தீர்வொன்று கிடைக்கும் வரையில் மத்திய அரசியலே பங்கு பெற்று அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில்லை என்பது எங்களது கொள்கை நிலைப்பாடாக உள்ளது. அதனால் அமைச்சுப் பதவிகளை நாங்கள் கோரப் போவதில்லை. ஆகையினால் அமைச்சுப் பதவிகளை நாங்கள் பெறப் போவதாக வெளிவந்த செய்திகளிலும் உண்மையில்லை.

அமைச்சுப் பதவிகள் பெறப் போவது தொடர்பாக வெளியிhகிய செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

அமைச்சுப் பதவிகளைப் பெறப் போவதாக வந்த செய்திகள் தவறான செய்திகள். அப்படியாக அமைச்சுப் பதவிகளைப் பெறப்போவதாக எவரும் சொல்லியிருக்கவில்லை. நான் சொன்ன ஒரே ஒரு கருத்து அது என்னவென்றால் இனப்பிரச்சனைக்கான தீரவு வருகிற வரைக்கும் மத்திய அரசாங்கத்திலே நாங்கள் பங்கு பெறக் கூடாது என்பது எங்கள் கொள்கை நிலைப்பாடாக இருக்கிறது. இன்றைக்கும் அது தான் எங்கள் கொள்கை நிலைப்பாடு.

ஆனால் மாறுகிற சூழ்நிலையிலே நாங்கள் அந்தக் கொள்கை நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்று மட்டும் தான் நான் சொல்லியிருந்தேன். அமைச்சுப் பதவிகளை எடுக்க வேண்டும். எப்ப எடுக்க வேண்டும்  என்று சொல்லவில்லை. ஆக எதிர்காலத்தில் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்று தான் சொல்லியிருந்தேன். ஆக பதவி எடுப்பதாக நான் சொல்லியிருக்கவில்லை.

கடந்த காலத்திலே சந்தர்ப்பம் இருந்த போது அமைச்சுப் பதவிகளை நாங்கள் எடுக்கவில்லை எடுத்திருக்க வேண்டுமென்று எங்களுடைய மக்களிலே பலர் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதிலே ஓரளவிற்கு நியாயமும் இருக்கிறது. ஆனால் அரசியல் தீர்வு வருகிற வரைக்கும் எங்களுடைய பேரம் பேசுகிற சக்தி குறையாமல் இருப்பதற்காகத் தான் நாங்கள் அந்த அமைச்சுப் பதவிகளை எடுக்காமல் இருந்திருக்கிறோம்.

அது எடுத்திருக்க வேண்டுமா இல்லையா என்கிற விமர்சனம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். ஆனால் முடிந்த விடயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்காமல் இனி வருகிற நாட்களிலே அப்படியான சூழ்நிலைகள் அதாவது சாதகமான சூழ்நிலைகள் ஏற்பட்டால் மத்திய அரசிலேயும் நாங்கள் பங்கு கொள்ள வேண்டுமா இல்லையா என்பதைக் குறித்து நாங்கள் திரும்பவும் பரிசீலித்து ஒரு முடிவெடுக்க வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post