ஹரி ஆனந்தசங்கரிக்கு கனடாப் பிரதமர் வழங்கிய புதிய பதவி - Yarl Voice ஹரி ஆனந்தசங்கரிக்கு கனடாப் பிரதமர் வழங்கிய புதிய பதவி - Yarl Voice

ஹரி ஆனந்தசங்கரிக்கு கனடாப் பிரதமர் வழங்கிய புதிய பதவி


கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியை சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார்.
42 ஆவது கனேடிய நாடாளுமன்றத்தில் இ ஹரி ஆனந்தசங்கரி 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை சுதேச மற்றும் வடக்கு விவகாரக் குழுவின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
இதன் போது 262 ஆவது சட்டமான கனேடிய பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்து கனடாவின் சட்டங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திற்கு அமைவாக இருப்பதை உறுதி செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற அவர் நாடாளுமன்றில் முன்னின்று செயற்பட்டார்.
கனேடிய பாரம்பரிய மற்றும் பன்முக கலாசார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராகஇ சுதேச மொழிகளை மதிக்கும் சட்டமான பில் சி -91 ஐ நிறைவேற்றுவதற்காகவும் அவர் பணியாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஹரி ஆனந்தசங்கரி தகவல் வெளியிடுகையில்
சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேட்டுக் கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நம் வரலாற்றின் போது பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா செய்த தவறுகளை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் கொள்கைகளை அங்கீகரித்து செயல்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனை சரிசெய்ய முடியும்.
இந்த நிலத்தில் முதல் தலைமுறையாக குடியேறியவர்கள் என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றுள்ள பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை முழுமையாக அமுல்படுத்துவது உட்பட பழங்குடி மக்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கு அயராது உழைக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த புதிய பதவியில் அமைச்சர் கரோலின் பென்னட் மற்றும் பழங்குடி மக்களுடன் இணைந்து கனடா முழுவதும் பணிபுரி எதிர்பார்க்கிறேன் ' என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post