அடுத்த சில வாரங்களில் புதிய கூட்டு முன்னணி அறிவிப்பு வெளியாகும் - சிவாஜிலிங்கம் தகவல்
தமிழர் தரப்பில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளை இணைத்து பரந்துபட்ட அளவில் புதியதோர் முன்னணியை உருவாக்கி அது தொடர்பில் இன்னும் சில வாரங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஐpலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது மாற்று அணி உருவாக்கம் தொடர்பில் எழுப்பிய கௌ;யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..
தமிழ் மக்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரதிநிதிகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இருந்து வந்தார்கள். அது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் தமிழர் தரப்பில் கூட்டமைப்பினருக்கு தான் பாரர்ளுமன்ற ஆசனங்களும் வழங்கப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் ஏனைய ஒரு சிலருக்கும் சில ஆசனங்கள் இருந்தன.
ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவைத் தெரிவித்து வந்த கூட்டமைப்பு என்னத்தை சாதித்திருந்தார்கள், கடந்த நான்கரை வருடத்தில் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்தது என்ன. அவர்களும் எதனையும் செய்யவில்லை. ஆக மொத்தத்தில் இவர்களும் எதனையும் சாதிக்கவில்லை.
குறிப்பாக இடைக்கால தீர்வைக் கூடப் பெறவில்லை. ஆத மாத்திரம் அல்லாமல் இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்ற விசாரணையில் இருந்தும் காப்பாற்றியவர்கள் கூட்டமைப்பினர் தான். அதாவது இலங்கை அரசிற்கு தொடர்ச்சியாக கால அவகாசத்தைக் கொடுத்து அந்த விசாரணையையே நீர்த்துப் போகச் செய்தார்கள்.
ஆவ்வாறான நிலைமையில் இன்றைக்கு வந்திருக்கின்ற புதிய அரசாங்கம் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும் அதனை தாங்கள் நிராகரிப்பதாகவும் கூறியிருக்கின்றது. ஆகையினால் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு கூட்டமைப்பினரே பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறான நிலைமைகள் கூட்டமைப்பிற்குள் தொடர்ந்து கொண்டிருந்ததால் தான் நாங்கள் அங்கிரந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்திருக்கின்றோம். அதனடிப்படையில் எங்களது கட்சி அறிவிப்பின் போது தனிமரம் தோப்பாகாது என்றும் எங்கள் கட்சித் தலைவர் சிறிகாந்தா அறிவித்திருந்தார்.
அதற்கமைய முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் ஈபீஆர்எல்எப் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் உட்பட ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் பேசி வருகின்றோம். மேலும் ஆனந்தசங்கரி ஐயாவின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும் பேசியிருக்கின்றோம். அதே போன்று தொடர்ந்தும் ஏனைய தரப்புக்களுடனும் பேசுவோம்.
ஆக ஒரு சுற்றுப் பெச்சுவார்த்தைகளை நாங்கள் இப்பொது முடித்திருக்கிறோம். இதன் பின் ஒத்த கருத்துள்ள கட்சிகளை இணைத்து பரந்துபட்ட முண்ணயை அமைப்போம். அந்தக் கூட்டு தொடர்பில் இன்னும் ஓரிரு வாரங்களிற்குள் அறிவிக்கப்படவும் இருக்கின்றது.
இதே வேளை வெறுமனே பாராளுமன்ற , மாகாண சபை தேர்தல்களையோ தேர்தல் ஆசனங்களையோ இலக்காககக் கொண்டு அல்லாமல் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வை அடைவதை நோக்கமாகக் கொண்டே செயற்பட வேண்டுமென்பதில் சகலரும் இணங்கியிரக்கின்றனர். ஆகையினால் ஒத்த கருத்துள்ள அனைவரும் இணைந்து விரைவில் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார்.
Post a Comment