தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ஆசிகா யாழில் கௌரவிப்பு
13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் நடைபெற்ற பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டிற்கும் எமது மாகாணத்திற்கும் யாழ் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த செல்வி வி. ஆசிகா கௌரவிக்கும் நிகழ்வு யாழ் பளுதூக்கல் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கிருபா லேணர்ஸ் இன் அனுசரணையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தில் இன்று (12) நடைபெற்றது.
இக் கௌரவிப்பு நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் நிகழ்வில் யாழ் பளுதூக்கல் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர்கள் கிருபா லேணர்ஸ் உரிமையாளர் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் விளையாட்டுத்துறை சார் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment