கூட்டமைப்புத் தலைமை இழைத்த தவறே மாற்றுத் தலைமைக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது - சுரேஸ்பிரேமச்சந்திரன் - Yarl Voice கூட்டமைப்புத் தலைமை இழைத்த தவறே மாற்றுத் தலைமைக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது - சுரேஸ்பிரேமச்சந்திரன் - Yarl Voice

கூட்டமைப்புத் தலைமை இழைத்த தவறே மாற்றுத் தலைமைக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது - சுரேஸ்பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பல தவறை இழைத்திருக்கின்றது. அதனால் மக்கள் மத்தியில் விரகத்தியும் கோபமும் ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தலைமையின் இத்தகைய செயற்பாடுகளே மாற்றுத் தலைமையின் தேவையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகையினால் இந்த மாற்றுத் தலைமையை மக்கள் முழுமையாக ஆதரிப்பார்கள் என்றே நமபுகின்றோம் என ஈபீஅர்எல்எப் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பில் இருந்த பல கட்சிகளும்; அதனை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். தனிப்பட்ட நபர்களென வேறு பலரும் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார்க்ள. இப்பொழுது இவர்கள் எல்லோரைம் உள்ளடக்கிய கூட்டணியொன்று மாற்றுத் தலைமையாக அiமுயுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்த கொண்டிருக்கிறது.

ஆகையினால் மிக விரைவாக அந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு வருமென்றும் நாங்கள் எதிர்பார்க்கிறறோம். அவ்வாறான கூட்டு முண்ணணியில் அந்த கூட்டு முண்ணயின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் யாரையும் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரையில் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியெண்பது அவசியம் என்பதை நாங்கள் எல்லோரும் புரிந்திருக்கிறோம். இந்த பரந்துபட்ட ஐக்கிய முன்னணியின் ஊடாகத் தான் தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளலாம் என்றும் நாங்கள் நம்புகின்றோம். அந்த அடிப்படையில் தான் இந்த மாற்றுத் தலைமையைப் பற்றி நாங்கள் சிந்தித்தோம். அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் அந்தப் பணிகள் நிறைவடையுமென்று நம்புகிறோம்.

இன்றைய கால கட்டத்தில் விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையிலையே அவ்வாறான அணி உருவாகுமென்று நான் எதிர்பார்க்கிறேன். நிச்சயமாக கூட்டமைப்பின் தலைமை பல பிழைகளை விட்டிருக்கின்றது. பல தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. அவர்கள் பல விசயங்களை பிழையாக கையாண்டிருக்கிறார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட கொள்கையில் இருந்து மிக நீண்ட தூரம் விலகிச் சென்றிருக்கின்றார்கள். இவ்வான பல வியங்கள் இருக்கின்ற நிலையில் தான் மாற்றுத் தலைமை தேவை என்ற முடிவிற்கு எல்லோரும் வந்திருக்கின்றோம்.

அவ்வாறான நிலையில் ஒரு மாற்றுத் தலைமை என்பது நிச்சயமாக பாராளுமுன்றத்திலும், மாகாண சபையிலும் சரி மக்களுடைய முழுமையான ஆதரவுடன் ஒரு பலம் பொருந்திய மக்கள் அமைப்புக்களாக அது மாற வேண்டும். அவ்வாறு மாறினால் தான் நாங்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்னெடுத்தச் செல்வதற்கு அது உகந்ததாக இருக்கும்.

நான் ஏற்கனவே கூறியது போன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இவை முன்னெடுத்தச் செல்வதற்கான பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கின்றது. அதனை அவ்வாறு பலம் பொருந்திய அமைப்பாக மக்கள் மாற்றுமிடத்து நிச்சயமாக அடுத்தகட்ட நகர்வுகளை நாங்கள் இலகுவாக மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அதாவது கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்ற பழமொழி தமிழில் இருக்கின்றது. இவ்வளவு காலமும் நாங்கள் உட்பட எல்லோரும் இணைந்து கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் மக்களுடைய ஆதரவை அதற்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டிருந்தோம். அதற்கமைய ஆதரவும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் கூட்டமைப்பு இன்றைக்கு பல தவறை விட்டிருக்கின்றது.

அந்தத் தவறுகள் குறித்த நாங்கள் திரும்ப திரும்ப சொல்லியும் இருக்கின்றோம். அந்த வகையில் ஒரு மாற்று அணி தேவையொன்று கூறினோம். நான் கடந்த பல வருசமாக சாதாரண மக்களுடன் பழகுகின்றேன் என்ற அடிப்படையில் பரவலாக தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய ஒரு கருத்து என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் முழுக்க முழுக்க கூட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக, சம்மந்தன் தங்களை ஏமாற்றி விட்டதாக, சம்மந்தன் போன்றோரால் நிறைய விசயங்களைச் செய்திருக்க முடியும் ஆனால் அவர்கள் அது எதனையும் செய்யவில்லை என்ற ஒரு கோபம், விரக்தி, மாற்றம் இது எல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

ஆகவே நிச்சயமாக அவ்வாறான ஒரு சூழலில் ஒரு மாற்றுத் தலைமை என்பது தவிர்க்க முடியாதது. அந்த அடிப்படையில் நிச்சயமாக தமிழ் மக்கள் அவ்வாறான ஒரு தலைமையை ஏற்றுக் கொள்வார்கள். அவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அவ்வாறான மாற்றுத் தலைமைக்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. என்றார்.

அதாவது யாரும் விருப்பத்தின் மத்தியில் அல்லது போட்டி மனப்பாங்கில் மாற்றுத் தலைமையை உருவாக்குவது என்பது அல்ல. இப்போது இருக்கக் கூடிய அந்தத் தலைமை என்பது ஒரு மாற்றுத் தலைமைக்கான தேவையை உருவாக்கியிருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த மாற்றுத் தலைமை என்பது தேவை. அதனை மக்களுக்கு ஏற்றுக் கொண்டு முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தான் நான் கருதுகின்றேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post