மாற்று அணியாக எங்களை இல்லாதொழிக்க சதி, புதிய மாற்று அணிகள் எல்லாம் போலியானவை, கூட்டமைப்புடன் இணைவது என்ற பேச்சிற்கே இடமில்லை - கஜேந்திரகுமார் - Yarl Voice மாற்று அணியாக எங்களை இல்லாதொழிக்க சதி, புதிய மாற்று அணிகள் எல்லாம் போலியானவை, கூட்டமைப்புடன் இணைவது என்ற பேச்சிற்கே இடமில்லை - கஜேந்திரகுமார் - Yarl Voice

மாற்று அணியாக எங்களை இல்லாதொழிக்க சதி, புதிய மாற்று அணிகள் எல்லாம் போலியானவை, கூட்டமைப்புடன் இணைவது என்ற பேச்சிற்கே இடமில்லை - கஜேந்திரகுமார்


கூட்டமைப்பு எதிரான உண்மையான மாற்று அணி நாங்கள் தான். இப்போது போலியான மாற்று அணிகள் உருவாக்கப்படுகின்றன. எனவே மாற்று அணியென்று இப்பொது கூறப்படுபவர்கள் கூட்டமைப்பின் கொள்கைகளைக் கொண்டிருப்பதால் அவர்கள் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளலாம். ஆனால் நாங்கள் அதற்குத் தயாரில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள தமிழ்த் தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்தின் போதே அக் கட்சியின் தலைவர் கNஐந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்று அணியாக நாங்கள் மட்டுமே இருக்கிறோம். அக உண்மையான மாற்று அணி நாங்கள் தான். ஆனால் மாற்று அணியாக நாங்கள் இருக்கக் கூடாதென்பதற்காக பல்வேறு சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக போலி மாற்று அணிகளும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்களை கூட்டமைப்பு ஏமாற்றி துரோகம் இழைத்து வருவதாக கடந்த பத்து வருடங்களாக நாங்கள் எங்கள் மக்களுக்குச் சொல்லி வந்திரக்கிறோம். அதன் உண்மைகளை அன்றைக்கு மக்கள் விளங்கிக் கொள்ளாதிருந்தாலும் இன்றைய நிலைமையில் மக்கள் அதனை நன்றாக விளங்கிக் கொண்டுள்ளனர்.

அந்த உண்மைகளை அன்றைக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் எனத் தெரிந்திருந்தும் நாங்கள் தொடர்ச்சியாக அந்த உண்மைகளை யதார்த்தங்களை மக்களுக்கு கூறியே வந்திருக்கிறோம். இதனால் மக்களுக்கு உண்மையாக இல்லாமல் பொய்களைக் கூறி வந்த கூட்டமைப்பினரின் நாடகங்களை மக்கள் நன்கு உணரத் தொடங்கியிருக்கின்றனர்.

அவ்வாறு மக்கள் தமக்கு விரோதமாகச் செயற்படுகின்ற தரப்பினர்களை இணங்கண்டு அவர்களை ஒதுக்குவதற்குத் தயாராக உள்ள நிலைமையில் எங்கே தங்கள் பதவிகள் போய்விடும் சலுகைகள் இல்லாமல் போய்விடும் தாம் மீண்டும் தேர்தல்களயில் வெற்றி பெற முடியாமல் போய்விடுமென்ற அச்சத்தில் தற்போது ஒற்றுமை குறித்தும் இணைவு குறித்தும் மாற்று அணி குறித்துமென பல்வேறுபட்ட கருத்துக்களை பலரும் சொல்வதற்கு ஆரம்பித்திருக்கின்றனர்.

குறிப்பாக நேற்றுவரை கூட்டமைப்பில் இருந்த பதவிகளை அனுபவித்தவர்களும் சலுகைகளைப் பெற்றவர்களும் இன்றைக்கு அது இல்லாமல் போனதாலும் அதே நேரம் அவர்கள் சார்ந்த கட்சியிலிருந்தே அவர்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அதிலிருந்து தாம் ஏதோ வெளியே வந்தவர்கள் என்பதைக் கூறி புதிய அணிகளை உருவாக்குகின்றனர்.

இவர்கள் பதவிகள் சலுகைகளுக்காக தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொண்டு மாற்று அணியை உருவாக்குகின்றனர். உண்மையில் இந்த மாற்று அணியென்பது பொலியானது. அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள அதே கொள்கையைக் கொண்ட அணியாகவே இருக்கிறது. அவர்களின் செயற்பாடுகளும் கூட்டமைப்பின் செயற்பாடுகளாகவே இருக்கப் போகின்றன.

இந்த இரு தரப்பிற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கப் போவதில்லை. ஆகவே தான் நாம் கூறுகிறோம் இப்போது கூறுகின்ற மாற்று அணியென்பது போலியானது என்பதுடன் உண்மையான மாற்று அணி என்பது நாங்களாகவே இருக்கிறொம். இதனை எமது மக்கள் நன்றாக விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும்.

அதே வேளை நாங்கள் மாற்று அணியாக வரக் கூடாதென்பதற்காக பல்வெறு சதிகள் முன்னெடுக்கப்படுகிறது. எங்களை மாற்று அணியென்ற கோணத்தில் இல்லாமல் செய்து இன்னும் இன்னும் எங்களை கீழிறக்குகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. அதற்காகவே இந்தப் போலியான அணிகள் உருவாக்கப்படுகின்றன.

இதே வேளை ஒற்றுமைய என்ற விடயம் குறித்து பேசுகின்றனர். எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமைய என்பது கொள்கை அடிப்படையில் மக்கள் நலன்சார்ந்ததாக இருக்க வேண்டும். ஆக நாங்கள் கூட்டமைப்புடன் சேர்ந்து பயணிக்க முடியாது. ஆனால் வெளியில் இருக்கின்ற அல்லது அதிலிருந்து தற்பொது வந்திருக்கின்ற தரப்புக்கள் குறிப்பாக கூட்டமைப்பின் அதே கொள்கைகளை அல்லது செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற தரப்பினர்கள் தாராளாமாக சேர்ந்து கொள்ளலாம். ஆனால் நாங்கள் அதற்குத் தயாரில்லை என்றார்.





0/Post a Comment/Comments

Previous Post Next Post