கூட்டமைப்பின் பொய்ப் பிரச்சாரங்களையும் உணர்ச்சி அரசியலையும் தமிழ் மக்கள் நம்பக் கூடாது - அங்கஐன் கோரிக்கை - Yarl Voice கூட்டமைப்பின் பொய்ப் பிரச்சாரங்களையும் உணர்ச்சி அரசியலையும் தமிழ் மக்கள் நம்பக் கூடாது - அங்கஐன் கோரிக்கை - Yarl Voice

கூட்டமைப்பின் பொய்ப் பிரச்சாரங்களையும் உணர்ச்சி அரசியலையும் தமிழ் மக்கள் நம்பக் கூடாது - அங்கஐன் கோரிக்கை


தேர்தல் காலங்களில் முன்னெடுக்கப்படும் பொய்ப் பிரச்சாரங்களுக்கும் உணர்ச்சி அரசியலுக்கும் தமிழ் மக்களின் மனநிலை மாற்றம் பெற்றதாலேயே கோத்தபாயிவிற்கு எதிராக வாக்களித்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஐன் இராமநாதன் அத்தகைய பொய் பிரச்சார்ங்கள், உணர்ச்சி அரசியல்களுக்கு எடுபடக் கூடாதென்றும் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து பத்து வருசமாக இன்றைய ஐனாதிபதியை ஒரு குற்றவாளியாக தமிழர் தரப்பிலுள்ள அரசியல்வாதிகள் சித்தரித்திருந்தனர். அவ்வாறு தமிழ்த் தலைவர்கள் சொன்னதை வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கினார்கள். குறிப்பாக இவர் வந்தால் வெள்ளைவான வரும் இரானுவ மயமாக்கப்படும், முதலலைக் கதைகள தங்கம் கடத்திய கதைகள் என்று வடக்கிலும் தெற்கும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு இவருக்கு எதிரான வாக்காக தமிழ் மக்களை மாற்றினார்கள். 

தேர்தல் காலத்தின் போது சொல்லப்பட்ட வெள்ளைவானாக இருக்கட்டும், முதலைக் கதைகளாக இருக்கட்டும் அதுவெல்லாம் பொய் என்பது இப்போது நிரூபணமாகி வருகிறது.  ஆனால் இந்தக் கருத்துக்கள் சொல்லப்பட்ட காலம் தேர்தல் காலம் என்பதால் இங்குள்ள தமிழ்த் தலைமைகள் அந்தப் பொய்களை சொல்லியே மக்களை ஏமாற்றி இவருக்கு எதிரான வாக்குகளாக மாற்றியுள்ளனர்.

இதனால் வடக்கில் இருந்து அவருக்கு அதிகமான வாக்குகள் இல்லாமல் போக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.. ஆனால் அவர் வெற்றி பெற்ற பின்னர் தனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் நான் தான் ஐனாதிபதி என்று சொல்லியிருக்கின்றார். அதற்கமைய தற்போது தனது செயற்பாடுகளையும் ஐனாதிபதி முன்னெடுத்து வருகின்றார்.

அதே நேரத்தில் தமிழ்த் தலைமைகளின் இத்தகைய நிலைப்பாடு என்பது தமிழர்களைப் பலவீனமான இடத்தில் தள்ளியிருக்கின்றது;. அதாவது ஒரு நாட்டினுடைய முழு விடயத்தையும் அறிந்து மக்களை வழிகாட்ட வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய தலைவர்கள் அதற்கு மாறாக செயற்பட்டு பலவீனமாக இடத்தில் இன்றைக்கு தள்ளியிருக்கின்றமை மிகவும் கவலையான விடயம். 

இதில் இன்னுமொரு விசயத்தைப் பார்த்தால் இதுவரைகாலமும் சிறுபான்மையினருடைய வாக்குகள் இல்லாமல் வெல்ல முடியாது, வெல்ல முடியாது என்று காட்டிக் கொண்டிருந்த நிலைமைகள் இன்றைக்கு இல்லாமல் போய்விட்டது. ஒரு பலவீனமான நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டதால் தொடர்ச்சியாக எமது தீர்வு சம்மந்தமாக பேசுவதற்கு அவர்களுக்கு இயலாமல் இருக்கிறது. இது மிக கவலைக்குரிய விசயம்.

ஆனாலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பொறவிட்டாலும் அவர்களுடைய நம்பிக்கையை மீளவும் பெற வேண்டுமென்ற அடிப்படையில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஐனாதிபதி முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார். அதாவது சமமான அபிவிருத்தி நாடு முழுவதும் இருக்க வேண்டும். நம்பிக்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் சமமான அபிவிருத்தி செல்ல வேண்டுமென்பது ஐனாதிபதியின் நோக்கம். அதனடிப்படையில் வேலைத் திட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால். குறிப்பாக வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்றோ இன ரீதியான பாகுபாடுகளோ இல்லாமல் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் ஐனாதிபதி தனது நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றார். ஆகையினால் வாக்களிக்காவிட்டாலும் தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது;.

ஆகையினால் இனிவரும் காலங்களிலாவது இந்த பொய்ப் பிரச்சாரங்கள் அல்லது உணர்ச்சிய அரசியலுக்கு மக்கள் எடுபடக் கூடாது. இவ்வறான நிலைமையில் இந்த அரசினூடாக தமிழ் மக்களுக்கு பல அபிவிருத்திகள் இந்த அரசினூடாக கிடைக்குமென்றே எதிர்பார்க்கிறேன்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post