யுhழ்ப்பாணம் கட்டப்பிராயிலுள்ள தனது இல்லத்தில் இன்று ஊடகவியியலாளர் சந்திப்பொன்றை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைரும் முன்னாள் பாராளுமுன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச்சந்திரன் நடாத்தியிருந்தார்.
இதன் போது அண்மையில் யாழில் ஊடகங்களைச் சந்தித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் மாற்று அணி வேண்டாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட கூட்டமைப்பில் இணைந்து கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது.
.
தமிழ் மக்களுடைய ஐக்கியத்தைப் பற்றியும் தமிழ் மக்கள் ஐக்கியப் பட வேண்டுமென்ற விடயம் தொடர்பாக நீண்டதொரு விளக்கத்தை அண்மையில் சுமந்திரன் சொல்லயிருந்தார். அது தொடர்பாக சில கருத்தக்களை நாங்களும் மக்களுடன் பகிர வேண்டியிருக்கிறது. இதில் முதலாவதாக ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு இருந்தது. அந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமைப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகளும் பங்குபற்றியிருந்தார்கள்.
ஆனால் பிற்பாடு என்ன நடந்தது என்றால் கூட்டமைப்பில் இருக்கக் கூடிய அல்லது அதனைத் தலைமை தாங்கக் கூடிய சம்மந்தன,; சுமந்திரன,; மாவை சேனாதிராசா போன்றவர்களது நடவடிக்கைகளின் காரணமாகவும் அவர்கள் கொள்கைகளில் இருந்து தடம் மாறிப் பயணித்ததன் காரணமாகவும் தொடர்ந்தும் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட முடியாமல் பலரும் வெளியேறியிருக்கின்றனர்.
அது மாத்திரமல்லாமல் ஒரு தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக போராடக் கூடிய ஒரு அமைப்பிற்கு ஒரு யாப்பு வடிவமோ அல்லது அந்த அமைப்பிற்கான வடிவமோ இல்லாமல் வெறுமனே ஒரு உதிரிக் கட்சிகளின் கூட்டு என்று சொன்ன அடிப்படையில் தேர்தல் காலத்தில் மாத்திரம் இவர்கள் கூடிப் பேசுவது வாக்குகளை எடுத்துக் கொள்வதென்பதற்கு அப்பால் கூட்டு முடிவை எடுப்பதற்கு இவர்கள் தயாராக இருந்ததில்லை.
அவ்வாறு இருந்தும் உட்கட்சிக்குள் ஏறத்தாழ 2002 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை அவர்களுடன் ஒன்றாக பயணத்தில் இந்த விசயங்களை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்த பொழுதும் கூட இறுதியாக அவ்வாறு ஒன்றைச் செய்ய முடியாது என்பதை திட்டவட்டமாகச் சொல்லவிட்டார்கள்.
அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட மாட்டாது. அதற்கு ஒரு யாப்பு தேவையில்லை. அதற்கான வடிவம் தேவையில்லை அதற்கு ஒரு மத்திய குழுN,வா செயற்குழுவே,h பெர்துக் குழுவோ தேவையில்லை என்ற கோணத்தில் தான் அவர்களுடைய முழுச் செயற்பாடுகளும் இருந்து வந்தது.
ஆகவே அதன் காரணமாக என்ன நடந்தது என்று சொன்னால் தமிழரசுக் கட்சியில் இருக்கக் கூடிய சம்மந்தன,; சுமந்திரன், மாவை போன்றோர் எடுப்பது தான் அங்கு முடிவாக இரந்ததே தவிர ஏனைய கட்சிகளின் கருத்தக்களை கேட்பதற்கோ அதனை உள்வாங்கிக் கொள்வதற்கோ அவர்கள் தயாராக இல்லை என்பது முதலாவது விடயம்.
இதன் காணரமாகத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கNஐந்திருகுமார் பொன்னம்பலம் போன்றோர் வெளியேறினார்கள் அதற்குப் பிற்பாடு நாங்கள் வெளியேறினோம். தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியேறியது. இப்படி பல கட்சிகள் அதிலிருந்து வெளியேறுவதற்கு மூல காரணியாக இவர்கள் இருந்தார்கள்.
இத்தகைய சூழ்நிலைமைகள் இருக்கையில் இப்பொழுது எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சுமந்திரன் சொல்கின்றார். மேலும் பிரிந்து நின்று அணிகளாக போட்டியிடுவதற்கு ஒரு பரீட்சார்த்த களமாக வருகிற பாராளுமன்றத் தேர்தல் இருக்கக் கூடாது என்றும் கூறுகின்றார்.அதே நேரத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பொதுஐன பெரமுன எடுப்பதற்கு நாங்கள் அனுமதிக்கக் கூடாது போன்ற கருத்துக்களை இப்போது சொல்ல ஆரம்பித்திரக்கின்றார்கள்.
ஏற்கனவே நீங்கள் பார்த்தீர்களானால் 2015 ஆம் ஆண்டு பாரர்ளுமன்றத் தேர்தலில் பல்வேறுபட்ட உறுதிமொழிகள் இவர்களால் கொடுக்கப்பட்டது. முக்கியமாக சம்மந்தன் சுமந்திரன் போன்றோர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரமல்ல அதன் பிற்பாடு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அவர்கள் செயற்பட்டார்கள். அதனை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
அதன் பின்னர் எதிர்க்கட்சியாக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுதும் கூட அவர்கள் ஆளும் கட்சியுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட்டு வந்தார்கள். அதற்கமைய அரசின் வரவு செலவுத் திட்டங்கள் முழுமையாக இவர்களால் ஆதரிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு எப்பொழுது பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அங்கத்தவர்களை அதற்காகப் பயன்படுத்திக் கொண்டது.
அது மாத்திமல்லாமல் nஐனிவாவில் இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக அரசிற்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தது. உண்மையாகவே nஐனிவாவில் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவான முடிவினை கூட்டமைப்பு எடுக்காமல் இருந்து சரியான முறையில் அமெரிக்காவுடனோ ஏனைய நாடுகளுடனோ பேசியிருந்தால் எமது பிரச்சனையை மனித உரிமைகள் ஆணையகத்தில் இருந்து ஐ.நாவினுடைய பொதுச் சபைக்கு கொண்ட சென்றிருக்க முடியும்.
அது பாதுகாப்புச் சபைக்கு இல்லாவிட்டாலும் கூட பொதுச் சபைக்கு கொண்ட செல்லப்பட்டிருக்க முடியும். அவ்வாறு பொதுச் சபைக்கு கொண்ட செல்லப்பட்டிருந்தால் அடுத்த கட்டம் எங்கு எப்படி நகர்த்துவது என்பதைக் கூட பார்த்திருக்க முடியும். ஆனால்; அரசாங்கம் இதனைச் செய்யும் அரசாங்கத்தை நாங்கள் நம்ப வேண்டும். அரசாங்கத்திற்கு நாங்கள் அழுத்தங்களைக் கொடுக்க கூடாது. அரசாங்கத்திற்கு நாங்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டுமென்று கூறி கூட்டமைப்பினர் செயற்பட்டு வந்ததால் தொடர்ச்சியாக அரசிற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
இதற்கு சிவசக்தி ஆனந்தன் தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக கையெழுத்திட வற்புறுத்தப்பட்டு அவர்களது கையெழுத்துக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன. இவ்வாறு இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்து வந்தவர்கள் தான் சம்மந்தன், சுமந்திரன். இவர்களைப் போலவே அந்தக் கூட்டமைப்பின் ஏனையோரும் செயற்பட்டு வந்தனர்.
அது மாத்திரமல்லாமல் ஒரு அரசியல் சாசனம் கொண்ட வரப்படும் அந்த அரசியல் சாசனம் கொண்டு வரப்படும் வரையில் அரசாங்கத்திற்கு எந்த அழுத்;தங்களும் கொடுக்க கூடாது என்று இன்னுமொரு விடயத்தையும் தெளிவாக குறிப்பிட்டு வந்தார்கள். அதனடிப்படையில் கடந்த நான்கரை வருட காலம் அரசியல் சாசனத்திற்கான பேச்சுகக்கள் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு வருசமும் இந்தா முடிகிறது அந்தா முடிகிறது என்றும் தீர்வு தீர்வு என்றும் சொல்லி சொல்லி வந்தாலும் இந்த அரசியல் சாசனம் முடிவில்லாமலே இப்பொழுது குப்பைக்குள் போட்ப்பட்ட விசயமாக மாறிவிட்டது.
ஆகவே அரசியல் சாசனம் வருமென்ற நம்பிக்கையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட ஏனைய பிரச்சனைகளைக் கூட இவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டார்கள். அரசியல் கைதிகள் விடுவிப்பை கூட பெரிசாக கண்டு கொள்ளவில்லை. காணிகள் விடுவிப்பை எடுத்தக் கொண்டால் அந்தக் காணிகளும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
ஆகவே இவர்கள் என்ன செய்தார்கள் என்றால் அரசியல் சாசனம் வரும் அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று சொல்லி பல்வேறுபட்ட விசயங்களையும் விட்டுக் கொடுத்தார்கள். அது அரசியல் கைதிகள். வுpவகாரம், காணாமலாக்கப்பட்டவர்கள் பிரச்சனை, காணிகள் விடுவிப்பு என்ற எல்லாவிசத்திலும் நாங்கள் தலையிட்டுக் கொள்ள வேண்டாம். அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். என்றும் தீர்வு வந்தால் எல்லாம் மாறி விடும் என்ற கோணத்தில் அவ்வாறு செயற்பட்டு வந்தததன் காரணமாக இப்பொழுது அரசியல் சாசனமும் இல்லை. கைதிகள் விடுதலைம் இல்லை காணாமலாக்கப்பட்டவர்களுக்கு தீரவும் இல்லை என்றதொரு சூழ்நிலை தான் இருக்கிறது.
ஆகவே மொத்தத்தில் இவர்கள் எடுத்துக் கொண்ட முடிவுகளைப் பார்த்தால் உண்மையில் கூட்டமைப்பு என்று இருந்தாலும் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதனுடNhன அல்லது மாவை சேனாதிராசாவோடு கூட பேச்சுக்கள் நடந்து இணக்கப்பாடு ஏற்பட்டதா என்றால் இல்லை. மாறாக தாங்களாக சம்மந்தன் சுமந்திரன் போன்றோர் எடுத்த முடிவுகளை ஏனையவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் தான் அது போய்க் கொண்டிருக்கிறது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் தமிழ் மக்கள் இவர்கள் மேல் கடுமையான வெறுப்பையும் விரகத்தியையும் கொண்டு பல்வேறுபட்ட அளிவில் அதனைக் காட்டியிருக்கின்றனர். கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அவர்களுக்கு விழுந்த வாக்குகள் இல்லாமல் போயிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்த கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஐனாதிபதி தேர்தலில் மக்கள் ஏற்கனவே ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். அதாவது கடந்த காலத்தில் தமிழ் மக்கள் காணாமல் போகவும் கொல்லப்படவும் காரணமாக இருந்த தமிழ் மக்கள் அச்சப்படக் காரணமாக இருந்த ஒருவர் ஐனாதிபதியாக வரக் கூடாது என்பதில் தமிழ் மக்கள் கவனமாக இருந்தார்கள்.
ஆகவே மாற்றாக ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுடைய நிலைப்பாடாக இருந்தது. அந்த மாற்றுத் தெரிவிற்காக அவர்கள் வாக்களித்தார்கள். நாங்களும் கூட என்ன கூறியிருந்தோம் என்றால் அது ஈபிஆர்எல்எப் மற்றும் விக்கினேஸ்வரன் போன்றவர்கள் மக்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று கூறினோம். ஏனெனில் எங்களுக்கு தெரியும் மக்கள் மனோ நிலை எவ்வாறு இருந்ததென்று.
ஆக விரும்பியவர்களுக்கு வாக்களிக்குமாறு கோருகின்ற போது அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை நிச்சயமாக எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்றால் சஐpத் பிரேமதாசாவிற்கு வாக்களிக்க வேண்டுமென்றொரு நிலைப்பாட்டை எடுத்து அதற்கு மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்தது.
ஆனால் இறுதியாக என்ன நடந்ததென்றால் சிங்கள மக்களினுடைய வாக்குகளில் கோத்தபாய ராஐபக்ச வருவதற்கான காரண கரத்தாக்களாக சம்மந்தனும் சுமந்திரனும் மாறினார்களே தவிர அவர்களால் தமிழ் மக்களுக்காக எதனையும் செய்ய முடியவில்லை.
ஆகவே கடந்த நான்கரை வருட கால அவகாசத்தில் முதலாவதாக் ஒரு விசத்தை எடுத்தக் கொண்டால் நாங்கள் தோல்வி கண்டு விட்டோம் என்பதை சுமந்திரன் சம்மந்தன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது அரசியல் சாசனம் கொண்டு வருவதிலும், யுத்தத்திற்குப் பிற்பாடு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளைக் கையாள்வதிலும் நாங்கள் தோல்வி கண்டு விட்டோம்.
ஆகவே இனி மேலும் நாங்கள் இவ்வாறு போக முடியாது என்பதை முதலில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தாங்கள் விட்ட தவறுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் மீண்டும் ஐக்கியத்தைப் பற்றி பேச முனைவது வேடிக்கையானது என்பதுடன் ஏமாற்றும் செயலாகவே பார்க்கிறோம். அதாவது எவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றி மீண்டும் ஒருமுறை ஐக்கியம் என்ற பெயரில் தாங்கள் எல்லா வாக்குகளையும் எடுத்துக் கொள்ளலாம் என்பது தான் இன்றைக்கு அவர்கள் கூறக் கூடிய ஐக்கியம் என்பதனுடைய பொருள்.
இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தையும் தெளிவாக கூற வேண்டும். அதாவது ஏற்கனவே ஒரு விடயத்தை சுமந்திரன் தெளிவாக ஊடகங்களுக்கு கூறியிருந்தார். இந்த அரசியல் சாசனம் வந்ததுடன் எனது பணி நிறைவடைந்துவிடும். அதற்குப் பிற்பாடு நான் பாராளுமன்றத்தில் அரசியல் வாதியாக இருக்க நான் முனைய மாட்டேன். பாராளுமன்றம் போக மாட்டேன்.
அவ்வாறு வராத பட்சத்தில் அதற்கான பொறுப்பை ஏற்று நான் அதிலிருந்த விலகி விடுவேன். ஆக அரசியல் சாசனம் வராவிட்டால் ஏதோவொரு விதத்தில் தான் அரசியலில் இருந்து விலகி விடுவதாகத் தான் கூறியிருந்தார். அவர் தன்னை ஒரு புனிதமான அல்லது nஐன்ரில்மானாக கருத்திக் கொள்வபவர் அல்லது சொல்பவர் ஆகவே அவர் நிச்சயமாக இதைப்பற்றி யோசிக்க வேண்டும்.
ஆக இந்த இரண்டு விசயங்களிலும் அதாவது அரசியல் சாசனம் நிறைவேறவில்லை அதற்கு மூல காரணகர்த்தாவாகவும் இவர் தான் இருந்தார். நான்கரை வருடங்களாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு ஒரு அரசியல் சாசனத்தைக் கொண்டு வர முடியாதவர்களாகத் தான் இருந்தார்கள்.
இன்னும் சொல்லப் போனால் அரசாங்கத்தின் பங்குதாரர்களாக அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்கள். எதிரும் புதிருமாக இருந்த இழுபறி நிலை இல்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக அரசிற்கு ஆதரவாக அதில் இணைந்து சொயற்பட்டார்கள். வடகிழக்கிலுள்ள மாவட்டங்களில் அவர்கள் தான் முக்கியஸ்தர்களாக இருந்தார்கள். இவ்வாறான சூழ்நிலை இருந்தும் கூட இவர்களால் எதனையும் செய்ய முடியவில்லை.
ஆனால் இன்று வரப் போகிற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வந்துவிட்டால் ஏதோ பொதுஐன பெரமுன தமிழ் மக்களுக்கு எதிராக திரண்டு விடுமென்ற விதமான ஒரு அச்சுறுத்தலை இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கின்றார். வரப் போகிற பாராளுமன்றத் தேர்தல் விகிதாசார முறைப்படி நடக்கப் போகிறது. இதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா கிடைக்காதா என்பது எல்லாம் கேள்விக்குரிய விசயம்.
அதே நேரத்தில் ஐனாதிபதி தேர்தல் முடிவுகளைப் பார்க்கின்ற பொழுது மீண்டும் பொதுஐன பெரமுன ஆட்சிக்கு வருவது தெளிவான விடயமாகத் தெரிகிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா கிடைக்காதா என்பது அடுத்த கட்டம். ஆகவே இதற்கு முன்னர் கோத்தபாயவை தோற்கடிக்க வேண்டுமானால் சஐpத்திற்கு வாக்களிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டது. இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க கூடாது ஆகவே நாங்கள் ஒன்றாக வேண்டும் என்று சொல்கிறார்கள்.
உண்மையில் அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்குமா கிடைக்காதா என்பதை பெருமளிவல் தீர்மானிக்கப் போவது சிங்கள மக்கள். நாங்கள் தமிழ் மக்கள் யாரும் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது பொதுஐன பெரமுனவிற்கோ வாக்களிக்கப் போவது கிடையாது. அவர்கள் தமிழ் தரப்பில் யார் கேட்கப் போகின்றார்களோ அவர்களைத் தான் கவனிப்பார்கள்.
ஆகவே தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டிய காலகட்டம் வந்திருக்கிறது. சுமந்திரன் தொடர்பாகவும் சம்மந்தன் தொடர்பாகவும் இவர்கள் சார்ந்தவர்களது செயற்பாடுகள் தொடர்பாகவும் மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். இந்த நிலையில் எதிர்காலத்தில் வரக் கூடிய பாராளுமன்றத்தில் தங்களுடைய பிரதிநிதிகள் எப்படியிருக்க வேண்டும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கிற கால கட்டம் வந்திருக்கிறது.
அவ்வாறான சூழ்நிலையில் ஒரு மாற்று அணி வரக் கூடாது என்று சொல்வதோ அல்லது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்னுமொரு கட்சியான பொதுஐன பெரமுனவிற்கு வந்து விடக்கூடாது என்று சொல்வதற்கு நிச்சயமாக சுமந்திரனுக்கு எந்தவிமான தேவையும் கிடையாது.
ஏனென்றால் ஐனாதிபதி தேர்தலிலும் சிங்கள மக்களின் வாக்குகள் தான் மிகப் பெருமளிவில் கிடைத்தள்ளது. ஆகவே இப்போதும் கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொடுக்க வேண்டுமென சிங்கள மக்கள் யோசித்தால் அவ்வாறு வருவதற்கும் காலம் இருக்கலாம். அவ்வாறு பெரும்பான்மையுடன் வந்துவிட்டால் அதைப் பயன்படுத்தி இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ஏன் முயற்சிக்க கூடாதென்பது அடுத்த கேள்வி.
ஏற்கனவே நிங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இருந்து உங்களால் இனப்பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. இப்பொழுது இவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்தலல் நாங்கள் சிறிய தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்களுடன் பேசி சில விடயங்களிலாவது தீர்விற்கு வர முடியுமா என்பதைப் பார்ப்பது தான் புத்திசாலித்தனம்
அவ்வாறு வந்தால் என்ன நடக்குமென்றால் 19 ஆவது தீருத்தச் சட்டத்தை அவர்கள் மாற்றலாம். அவ்வாறு அதனை மாற்றினால் என்ன நடக்குமென்றால் அதாவது சுதந்திரமான தேர்தல் ஆணையகமோ அல்லது பல்வேறுபட்ட சுதந்திரமான அமைப்புக்களோ இல்லாமல் செய்யப்படலாம். ஐனாதிபதியானவர் தொடர்ந்தும் பல முறை ஐனாதிபதி தேர்தலில் கேட்பதற்கான இடம் சில சமயதம் ஏற்படலாம்.
ஆகவே இதன் மூலம் உண்மையாக பயன் பெறப் போவது யார் அல்லது இதனால் ஏற்படும் நன்மை தீமை என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆகவே தமிழ் மக்கள் தங்களை தாங்களே நிர்வகிகக் கூடிய அளவிற்கு தங்களது பாதுகாப்பை பலப்படுத்தக் கூடிய அளவிற்கு அவர்கள் அதற்கான தீர்வை எவ்வாறு பெற்றுக் கொள்வது அதற்கான உபாயங்களை எவ்வாறு வகுத்துக் கொள்வது என்று நாங்கள் தீர்மானிக்க வேண்டும்.
அதே நேரத்தில் .சுமந்திரன் ஒருவர் திடிரென மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரக் கூடாது என்றும் தமிழ்த் தரப்பில் ஒரு கூட்டு ஒன்று வரக் கூடாது என்றும் அந்தக் கூட்டு அடுத்த தேர்தலை பரிசீலிப்புக்கான இடமாக பார்கக்க் கூடாது என்ற தொணியில் பேசுவது தமிழ் மக்களை முழுக்க முழுக்க ஏமாற்றுவதற்கான ஆரம்பத்தை அவர் செய்கின்றார் என்பது தான் கருத்து.
ஆகவே முதல் தாங்கள் விட்ட தவறுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தோல்விகளை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும். தோல்விகளில் இருந்த பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். இனிமேல் எவ்வாறு போவதென்பதை தீர்மானிக்க வேண்டும். இவை எதனையும் செய்யாமல் இவர் ஏனைய கட்சிகளுக்கு பாடம் புகட்ட யோசிப்பதும் தமிழ் மக்களை ஏமாற்ற யோசிப்பதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயம் ஆகும் என்றார்.
Post a Comment