யாழ் நகர்ப்புற கடைத் தொகுதிகளிற்கு ரேநடி விஐயம் செய்த முதல்வர் ஆர்னோல்ட் பிரச்சனைகள் தேவைகள் தொடர்பில் ஆராய்வு
யாழ் நகர்ப்புற கடைத்தொகுதிகளை பார்வையிட நேரடிக் கள விஜயம் ஒன்றை மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மேற்கொண்டார்.
குறித்த நேரடிக் கள விஜயத்தின் போது நகர்ப்புற கடைத்தொகுதிகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் கடைத்தொகுதிகளில் சுகாதார சீர்கேடாக உள்ள இடங்கள்இ கடைகளுக்கு உரித்தான எல்லையை தாண்டி வீதி நடைபாதைகள் வரை விற்பனைப் பொருட்களை வைத்து முறையற்ற வகையில் கடை நடாத்துவதுடன் -
பொது மக்களுக்கு சிரமங்களை கொடுக்கும் விற்பனை நிலையங்கள் டெங்குத்தாக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் சுத்தம் செய்யப்படாத மற்றும் பாதுகாப்பற்ற வடிகாண்கள்இ அனுமதியின்றி கட்டுமானங்களை மேற்கொண்டுள்ள கடைகள்இ வியாபார நிலையங்கள் என்பன குறித்து முதல்வரால் அவதானம் செலுத்தப்பட்டது.
மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் உரிய நடடிவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் முதல்வர்.
குறித்த விஜயத்துடன் நின்றுவிடாது இவ்வாரமும் குறித்த பிரச்சினைகள் உரிய முறையில் சீர்செய்யப்பட்டுள்ளனவா என முதல்வர் மற்றுமொரு நேரடி விஜயத்தை திடீரென மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடடுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
முதல்வரின் இவ் நேரடி விஜயத்தில் யாழ் மாநகர பிரதி முதல்வர் யாழ் மாநகர பொறியியலாளர்கள் வருமானவரிப் பரிசோதகர்கள் சுகாதாரப் பகுதி பிரிவினர் சந்தை மற்றும் கடைத்தொகுதி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment