இனப்பிரச்சனைத் தீர்விற்கு இந்தியா உதவ வேண்டும், கூட்டமைப்பிலிருந்த சென்றவர்கள் தாய்வீட்டிற்கு எப்போதும் வரலாம் - சிவஞானம்
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்த வேண்டிய தார்மீக கடமை இந்தியாவிற்கு இருக்கிறது. அதே நேரம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிலைவேற்றக் கூடிய தீர்வொன்றுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவ வேண்டுமென்றும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஆண்மையில் இந்தியா சென்ற இலங்கை ஐனாதிபதியிடம் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருக்கின்றார். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை எங்களது இனப்பிரச்சனைக்கான தீர்வாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனாலும் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டிய அல்லது அமுல் செய்ய வேண்டிய பொறுப்பை இந்தியா எடுத்திருக்கிறது. அவ்வாறு 13 ஆவதை அமுல் செய்ய வேண்டியது இந்தியாவின் தார்மீகக் கடமையாகவும் இருக்கிறது. அதன் நிமித்தமாக இந்தியப் பிரதமர் 13 நிறைவேற்றுமர்று வலியுறுத்தியிருக்கின்றார்.
ஆனால் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியசமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றையே நாங்கள் கோரி வருகின்றோம். அத்தகையதொரு தீர்வை நாங்கள் அடைவதற்கு இந்தியா தொடர்ந்தும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்விற்கு இந்தியா முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை வரவேற்பதுடன் அதற்கு நன்றியையும் தெரிவிக்கின்றோம்.
ஆனால் நாம் தொடர்ந்தும் வலியுறுத்திக் கூற விரும்புவது என்னவெனில் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை பெற்றுத் தருவதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும். அதே போல் இலங்கை அரசும் இந்த நாட்டிலுள்ள இனப்பிரச்சனைக்கான தீர்வொன்றை ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது.
இதேவேளை இன்றைய சூழலில் தமிழ்த் தரப்பினர்கள் அனைவரும் ஒருமித்துச் செயற்பட வேண்டியது அவசியம். ஆந்த ஒற்றுமையை எமது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வலியுறுத்தியிருக்கின்றார். அவ்வாறு ஒரே கட்சியில் இணைந்து செயற்படுவதான ஒற்றுமை சாத்தியமா இல்லையா என்பதற்கப்பால் முதற்கட்டமாக அனைவரும் ஒருமித்த குரலிலாவது செயற்பட வேண்டும்.
இன்றைக்கு வெளியில் இருக்கின்ற கட்சிகள் பலவம் கூட்டமைப்பில் இருந்து தான் சென்றவர்களாக இருக்கின்றனர். அகவே அவர்கள் மீள தாய்வீட்டிற்கு வரலாம். அவ்வாறு நாங்கள் கோரவது தோல்வியின் நிமித்தம் அல்ல. தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே அந்தக் கோரிக்கையை முன்வைக்கிறொம். ஆகவே எது எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்காக அனைவரும் ஒருமித்துச் செயற்பட வெண்டியது அவசியம் என்றார்.
Post a Comment